"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இந்திக்கு எதிராக பேசவைத்துள்ளனர் என்றும் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆளுநர் ரவி பரபர குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதற்கு எதிராக குரல் எழுப்பியவர் மகாகவி பாரதி. அவர் எழுதிய கட்டுரை அன்று ஹிந்து இதழில் வெளியானது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சமூக தத்துவங்களையும் வழங்கியதில் தமிழ் மொழி ஆங்கிலத்தை விட பன்மடங்கு உயர்ந்தது. மற்றவற்றை கற்றுத் தருவதில் ஆங்கிலத்திற்கு முன்னோடியாக தமிழ் இருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை இந்திக்கு எதிராக பேசவைத்துள்ளனர். 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர், "மதச்சார்பின்மை என்பது வெளிநாட்டு கான்செப்ட்" என கூறியது சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிக்க: "பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!