மேலும் அறிய

"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!

பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில்தான் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது என்றும்  மாநில போதை தடுப்பு பிரிவினரால் 1 கிராம் போதை பொருட்கள் கூட பிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை என தமிழக ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென்காசி சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, "நமது நாடு நவராத்திரியை கொண்டாடி வருகிறது. தீயவையை அழித்ததன் வெற்றியாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா பூஜைகள் தினமும் இரவில் ராஜ் பவனில் நடத்தப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் அனைத்து துறைகளில் பஞ்சாப் முதன்மையாக விளங்கியது. தற்போது போதை பழக்கத்தால் மோசமான நிலையை சந்தித்து வருகிறது.

தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சு:

நாட்டின் பல பகுதிகள் போதை பழக்கத்தால் சிதைந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது. மத்திய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது.

மாநில போதை தடுப்பு பிரிவினரால் 1 கிராம் போதை பொருட்கள் பிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை. மத்திய நிறுவனங்கள் டன் கணக்கில் போதை பொருட்களை பறிமுதல் செய்கிறது. பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில்தான் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர், "ஒரே அறையில் இருந்தாலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் செலவலிப்பது இல்லை. செல்போன்களை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள் பெற்றோர்களே குழந்தைகளின் முதல் பொறுப்பாளரகள். குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வது அவசியம்" என்றார்.

கோயிலில் வழிபாடு: தென்காசி சென்ற ஆளுநர் ரவி, தன்னுடைய குடும்பத்தினருடன் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி சங்கரநாராயணரை தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியம் மற்றும் தேசம் மேன்மேலும் முன்னேற்றம் அடைய, ஆளுநர் ரவி மனபூர்வமாக வேண்டிக் கொண்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget