TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
TASMAC Holiday: தமிழகத்தில் மதுபான விற்பனையால் தினமும் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மது விற்பனையால் கொட்டும் வருமானம்
நவ நாகரீக காலத்தில் மது குடிப்பது சர்வ சாதாரணமாகவிட்டது. ஒரு காலத்தில் மது குடித்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த காலம் மாறி, தற்போது மது குடிக்காதவர்களை தான் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதற்கு ஏற்ப ஐடி நிறுவனங்களில் நடைபெறும் விருந்தில் கூட பெரும்பாலும் மதுபானம் கட்டாயமாகியுள்ளது. இரவு நேர பார்ட்டிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் கைகளிலும் மதுகோப்பைகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது.
தமிழகத்தில் மது விற்பனை
இதில் மதுபான விற்பனை மூலம் நாளொன்றுக்கு 100 முதல் 125 கோடி ரூபாய் வரையும், அதிலும் பொங்கல், தீபாளவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை காலத்தில் திரைப்பட நடிகர்களின் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் அள்ளி குவித்து வருகிறது. அந்த அளவிற்கு மது விற்பனையானது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மது விற்பனையானது மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என காத்திருந்து மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கி செல்வார்கள். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வார விடுமுறை, பண்டிகை காலங்களில் விடுமுறைகள் அறிவிப்பது உண்டு, ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் எப்போதும் விடுமுறைகள் இல்லை. பண்டிகை நாட்களில் மட்டுமே பல கோடி ரூபாய் வருவாய் வரும். எனவே குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும்.
3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அந்த வகையில் மது பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் வெள்ளிக்கிழமை, 26-01-2006 அன்று குடியரசு தினம் திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளனர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை (Dry Day) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தினத்தன்று டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
அனைத்து மறுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் முடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள், லிற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்டத்தில் ஆட்சியர் சார்பாக உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூவர் தினம் உள்ளிட்ட இந்த 3 தினங்களில் மதுபான கடைகளை திறக்க கூடாது எனவும் அப்படி திறக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















