பிவிசி ஆதார அட்டை என்றால் என்ன?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: X (Twitter)

ஆதார் கார்டு இன்று மிகவும் அவசியமான ஆவணமாகும். அரசு திட்டத்தின் பயனைப் பெறவோ அல்லது சிம் கார்டு வாங்கவோ ஆதார் அவசியம்.

Image Source: X (Twitter)

காகிதத்தில் உள்ள ஆதார் அட்டை சில நாட்களில் சேதமடைகிறது. ஆதார் PVC அட்டை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஆதார் அட்டையாகும்.

Image Source: X (Twitter)

பிவிசி ஆதாா் அட்டையானது ஏடிஎம் அல்லது டெபிட் காா்டு போல இருக்கும்- இது காகிதத்தை விட நீடித்து உழைக்கக்கூடியதாக இருப்பதால் சிதையாது.

Image Source: PTI

பிவிசி ஆதாரத்தில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் உள்ளது- தினசரி பயன்பாட்டிற்கும் பாக்கெட்டில் வைத்துக்கொள்வதற்கும் முற்றிலும் பாதுகாப்பானது.

Image Source: PTI

பிவிசி ஆதார் அட்டை வாங்க, UIDAI இணையதளத்திற்கு (myaadhaar.uidai.gov.in/genricPVC) செல்லவும். அதில் Order Aadhaar PVC Card' என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆதார் எண் மற்றும் கேப்ட்சா உள்ளீடு செய்யவும்

Image Source: Pinterest

உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, பாதுகாப்பு குறியீட்டை (Captcha) சரிபார்க்கவும்.

Image Source: Pinterest

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும் OTP மூலம் சரிபார்த்து, 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆர்டர் செய்யலாம்

Image Source: Pinterest

உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை UIDAI இணையதளத்தில் சரிபார்க்கலாம்

Image Source: Pinterest