மோடி ஆட்சியில் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் முற்றிலும் குறைந்து விட்டன - எல்.முருகன்
கடந்த பத்து ஆண்டுகளில் 245 மீனவர்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம், மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்தார்
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கையால் 2014க்குப் பிறகு எல்லையில் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் முற்றிலும் குறைந்து விட்டன என மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின்பு, முதன்முறையாக எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில்," மீனவர்களின் நலன்கள் காக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும். பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கையால் எல்லைப் பகுதிகளில் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் ஜீரோவாக குறைந்து விட்டது. எனவே, மீன்வளங்களை நீடித்திருக்கச் செய்வது, மீன்பிடித் தொழில் ஏற்றுமதியை அதிகரிப்பது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
கச்சத்தீவு மீட்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், " கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக தான். இதுகுறித்து, பின்னர் விரிவாக பேசலாம். இன்று தான் பணியைத் தொண்டங்கியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தரவுகள் கூறுவது என்ன?
1991 முதல் 2011 வரை இலங்கை கடற்படையினரால்,தமிழக மீனவர்கள் 83 பேர் கொல்லப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பதில்மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. கடந்த பத்து ஆண்டுகளில் 245 மீனவர்கள், இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக, 2021 பிப்ரவரி மாதம் அதிமுக எம்.பி தம்பிதுரை மாநிலங்களவையில் தெரிவித்தார். கடலில் கொல்லப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை மட்டுமே இதுவாகும். காயமடைந்தவர்கள் நிலைமை குறித்த தரவுகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 1983 முதல் இதுநாள் வரை 500க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொலலப்பட்டிருக்கலாம் என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டு தொடக்கத்தில், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
அண்டை நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விவரம்
நாடு |
சிறையில் உள்ள மீனவர்கள் எண்ணிக்கை |
பாகிஸ்தான் |
270 |
வங்கதேசம் |
61 |
இலங்கை |
0 |
ஈரான் |
09 |
முன்னதாக, மதிமுக பொதுச் செயலலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், 2019ல் 210, 202௦ல் 74 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அரசின் தொடர் முயற்சிகளால் அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்" எனத் தெரிவித்தது.
தமிழ்நாடு மீனவர்களின் 62 படகுகளை இலங்கை கடற்படை சிறைபடித்து வைத்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தெரிரிவித்தது.
மேலும், வாசிக்க:
Union Minister L. Murugan: வழக்கறிஞர் டூ மத்திய அமைச்சர்.. எல்.முருகன் கடந்து வந்த பாதை!