மேலும் அறிய

TN Finance Ministers: தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ...!

அரசு நிர்வாகத்தை பொறுத்தவரையில், முதலமைச்சருக்கு பிறகு முக்கியமான அமைச்சராக நிதியமைச்சர் கருதப்படுகிறார்.

அரசு நிர்வாகத்தை பொறுத்தவரையில், முதலமைச்சருக்கு பிறகு முக்கியமான அமைச்சராக நிதியமைச்சர் கருதப்படுகிறார். மாநிலத்தின் பொருளாதாரம், கஜானா ஆகியவை நிதியமைச்சகத்தின் கீழ் தான் வருகிறது. மற்ற எல்லா துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வது நிதியமைச்சகத்தின் கடமை.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர்கள்:

முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சகத்தில் இன்று பெரிய மாற்றம் நடந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சராக பதவி வகித்து வந்த பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சுதந்திரத்திற்கு பிறகு, நடைபெற்ற முதல் பொது தேர்தல் முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் பட்டியலை கீழே காண்போம்.

சி.சுப்பிரமணியம்:

ராஜாஜி மற்றும் காமராஜர் ஆகியோரின் அமைச்சரவைகளில், 1952 முதல் 1962 வரையில், நிதித்துறை மட்டும் இன்றி சட்டம், கல்வி ஆகிய துறைகளை கவனித்து வந்தவர் சி.சுப்பிரமணியம்.

பக்தவசலம்:

மெட்ராஸ் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சரான பக்தவசலம், முதலமைச்சராக பதவி வகிப்பதற்கு முன்பு, 1962 முதல் 1963ஆம் ஆண்டு வரை காமராஜர் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தார்.

அண்ணா:

நவீன தமிழ்நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றிய அண்ணா, 1967 முதல் 1969 வரை நிதியமைச்சராக பதவி வகித்தார்.

செ.மாதவன்:

முதலமச்சராகவும் நிதித்துறையையும் கவனித்து வந்த அண்ணாவின் மறைவுக்கு பிறகு, நிதித்துறையை செ.மாதவன் சில காலம் கவனித்து வந்தார்.

கே.ஏ.மதியழகன்:

திமுக தொடங்கப்பட்ட காலத்தில், அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.ஏ.மதியழகன், 1969 முதல் 1970 வரை நிதியமைச்சராக பதவி வகித்தார்.

நெடுஞ்செழியன்:

அண்ணாவின் மறைவுக்கு பிறகு, முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நெடுஞ்செழியன், எம்ஜிஆர் புது கட்சி தொடங்கி ஆட்சி அமைத்தபோது, 1980 முதல் 1987 வரை, அவரின் அமைச்சரவையிலும் 1991 முதல் 1996 ஜெயலலிதா அமைச்சரவையிலும் நிதியமைச்சராக பதவி வகித்தார்.

நாஞ்சில் மனோகரன்:

திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபோது, அதிலிருந்து பல்வேறு தலைவர்கள் விலகினர். அதில், முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன். 1977 முதல் 1980 வரையிலான காலத்தில், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார்.

மு.கருணாநிதி:

1971 முதல் 1976 வரையிலும் நிதி அமைச்சராகவும்,  1989 முதல் 1991 வரையில் முதலமைச்சராக மட்டுமின்றி  நிதி அமைச்சராகவும் கருணாநிதி பதவி வகித்தார். 1996 முதல் 2001ம் ஆண்டு காலகட்டத்திலும், இவரே நிதியமைச்சர் பதவியை வகித்து வந்தார்

சி.பொன்னையன்:

இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முதலமைச்சரான ஜெயலலிதாவின் அமைச்சரவையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பொன்னையன், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.

க.அன்பழகன்:

2006 முதல் 2011 வரை, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான க.அன்பழகன், நிதித்துறையை கவனித்து வந்தார்.

ஓ.பன்னீர் செல்வம்:

2011 முதல் 2017 வரை, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், நிதித்துறையை கவனித்து வந்தவர் ஓ.பன்னீர் செல்வம்.  2018 முதல் 2021 வரையில், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.

டி.ஜெயக்குமார்:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் 16 பிப்ரவரி 2017 - 21 ஆகஸ்ட் 2017 வரை நிதியமைச்சராக ஜெயக்குமார் செயல்பட்டார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்:

கிட்டத்தட்ட 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு பிறகு, அமைந்த திமுக அரசில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை நிதியமைச்சராக பதவி வகித்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

தங்கம் தென்னரசு:

2006 முதல் 2011 வரையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் 2021 முதல் இன்று வரை, தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்த தங்கம் தென்னரசுக்கு தற்போது நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget