(Source: ECI/ABP News/ABP Majha)
“போலீஸ்னா என்ன? விதிகளை கடைபிடியுங்கள்! மீறினால்....” - காவல்துறையினரை எச்சரித்த தமிழக டிஜிபி!
தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தரப்பில் காவல் துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தரப்பில் காவல் துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காவல் துறையினர் வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், அப்படி அணியாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறும் போலீசார் மீது பொது மக்களுக்கு விதிக்கப்படும் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துசெல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம். மீறுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்டநகரங்களில், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்துவாகனம் ஓட்டுகின்றனர்.
பின், இருக்கையில் அமர்ந்து செல்வோரில், 10 சதவீதம் பேர் தான் ஹெல்மெட் அணிகின்றனர் என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள, சிறு நகர பகுதிகளில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மிகவும் குறைவு.
பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை என, தெரிய வந்துள்ளது. இதனால், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த போலீசாரிடம், வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கி வந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 'போலீஸ்' என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது துறை ரீதியாக மட்டுமல்லாமல், வழக்கு பதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், கடந்த மாதம் 23.05.2022 முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தினர். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.". இதன் அடிப்படையில் 12 நாட்களாக தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஊரறிய 21,984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக கடந்த 11 நாட்களில் 21 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயை வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துக்கப்பட்டது. பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் கடந்த 12 நாட்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.