TN Corona LIVE Updates : மாநகர பேருந்துகள் நாளை முதல் 50% இருக்கைகளுடன் இயங்கும்
TN Corona Cases LIVE Updates: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பொதுமக்களிடம் ரெம்டெசிவர் மருந்து கேட்டு அலைக்கழிக்க கூடாது
LIVE
Background
ரெம்டெசிவர் உயிர்காக்கும் மருந்து அல்ல. இதனை தனியார் மருத்துவர்கள் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து கட்டாயம் அல்ல. அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், பொதுமக்களிடம் ரெம்டெசிவர் மருந்து கேட்டு அலைக்கழிக்க கூடாது என்று தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் அவசியமில்லாமல் இம்மருந்துக்காக காத்திருக்க தேவையில்லை. தற்பொழுது சென்னையில் மட்டும் ரெமிடெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் ரெமிடெசிவர் மருந்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணாமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான 4 பேர் அடுத்ததுத்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 3-வது கொரோனா பரவல் தவிர்க்க முடியாதது - முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன்
சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸின் பரவலை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் தெரிவித்தார். இருப்பினும், மூன்றவாது அலையின் கால அளவை கணிக்க இயலாது என்றும் கூறினார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்" தற்போது பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டாவது அலையின் வீரியத்தை வல்லுநர்கள் முன்கூட்டிய கணிக்க தவறவிட்டனர்" என்பதனை ஒப்புக் கொண்டார்.
சென்னையில் கடந்த 30 நாட்களாக கொரோனா தடுப்பூகளின் போடப்படும் நிலை
மாநகர பேருந்துகள் நாளை முதல் 50% இருக்கைகளுடன் இயங்கும்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கின்ற வகையில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, 03.05.2021 அன்று தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட, 06.05.2021 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (06.05.2021) முதல் மாநகர் போக்குவரத்தக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் தடுப்பு மருந்து எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர்
அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவில் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்
கொரோனா நோய்த் தோற்று - மகாராஷ்டிரா மாநிலம் நிலவரம்
கடந்த 10 நாட்களாக, மகாராஷ்ட்ராவில் அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினமும் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபர்களின் எண்ணிக்கை விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி 6,99, 858 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது 6,41,910 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 891 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.