மேலும் அறிய

அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தொடர்ந்து பாஜகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம்.

எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

"Disaster மாடல் அரசு"

சட்டமேதை அம்பேத்கர், நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம்.

ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு" என குறிப்பிட்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

கடந்த 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், ஈ.வெ.ரா. திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழக்கவே, 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரும் சோகமாக உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆண்டு அவரும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதில் முக்கிய திருப்பமாக திமுகவே இந்த இடைத்தேர்தலில் நேரடியாக களம் காணும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரான வி.சி. சந்திரகுமாரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Musk: DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Musk: DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
India Vs Pakistan: பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
Embed widget