10th Result Subject Wise: ஆங்கிலத்தில் அடித்து தூக்கிய தேர்ச்சி விகிதம்: 10ஆம் வகுப்பில் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் லிஸ்ட்!
Tamil Nadu 10th Result 2024 Subject Wise:10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
- தமிழ் /மொழி பாடம் – 96.85%
- ஆங்கிலம் - 99.15%
- அறிவியல் - 96.72%
- சமூக அறிவியல் - 95.74%
- கணிதம் - 96.78%
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 8,94,264 மாணவ, மாணவியர் எழுதினர். மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061 மாணவர்களின் எண்ணிக்கை: 4,47,203.
அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். அதேபோல், மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளில் தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக மாணவர்கள் 88.58 சதவீதம் (3,96,152) பேரும் மாணவிகள் 94.53 சதவீதம் (4,22,591)பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - Fail ஆனவர்கள் இதை மறக்காதீங்க!