அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை: ஆய்வு துவக்கம்! காத்திருக்கும் காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்!
Kanchipuram Double Rail Line: " செங்கல்பட்டு -காஞ்சிபுரம் -அரக்கோணம் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன"

அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு இடையே தக்கோலம் வழியாக இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம், சென்னை கடற்கரை வழியாகச் சுற்றி செல்லாமல், தக்கோலம் வழியாக நேரடி புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு ஒரு பிரத்யேக வழித்தடத்தை உருவாக்கப்பட உள்ளது. தற்போது இந்த மார்க்கத்தில் ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளதுடன், ஒன்பது ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
சென்னை புறநகர் ரயில் சேவைகள்
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் பகுதிகளுக்கு ரயில் சேவை இருந்தாலும், போதுமான அளவில் ரயில்கள் இயக்கப்படவில்ல, என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கூடுதலான ரயில் சேவை என்பது ரயில்வே நிர்வாகம் சார்பில், செய்து தரப்படாமலே இருந்து வருகிறது.
பயணிகளின் நீண்ட கால கோரிக்கை
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே 30 கிலோமீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படாமல் உள்ளதால், கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதில் , தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக பயணிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், தன்னார்வால அமைப்புகள் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்தும் இரட்டை ரயில் பாதை இன்று வரை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் பாலூர், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் எதிரே வரும் மற்றொரு ரயிலுக்காக, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதேபோன்று ரயில் நிலையங்களிலும் போதிய வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
வருவாய் பெறும் ரயில் நிலையங்கள்
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே 12 ரயில் நிலையங்கள் உள்ளன. 12 ரயில் நிலையங்களிலும் அதிக அளவு வருமானம் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் தொடர்ந்து, அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பயணிகளுக்கான அடிப்படைத் தேவைகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
கமிட்டி கொடுத்த அனுமதி
12 ரயில் நிலையங்களிலும் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 35 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. இதுதொடர்ந்து அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஆண்டுதோறும் 16 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனாலும் கூடுதல் ரயில் சேவை என்பது இயக்கப்படாமலே இருந்து வருகிறது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் -அரக்கோணம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் செயல்படுத்துவதற்காக ரயில்வே கமிட்டியின் ஒப்புதல் தற்போது பெறப்பட்டுள்ளது.
ஆய்வுப் பணிகள் துவக்கம்
அரக்கோணம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு இடையே தக்கோலம் வழியாக இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம், சென்னை கடற்கரை வழியாகச் செல்லாமல், தக்கோலம் வழியாக நேரடி புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு ஒரு பிரத்யேக வழித்தடத்தை உருவாக்கும்.
தற்போது இந்த மார்க்கத்தில் ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளதுடன், 9 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் மிகப்பெரிய அளவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






















