முதலிடம் ! செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாதனை! நெல் உற்பத்தியில் அசத்திய விவசாயிகள்: முழு விவரம்!
Chengalpattu News: டெல்டா மாவட்டங்களுக்கு பிறகு நெல் உற்பத்தியில், செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களின் நெல் கொள்முதலில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய பயிர்
தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி தவித்த மற்றும் மாவட்டங்களில் நெல் சாக்குபடி அதிகமாக செய்யப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது
நெல் கொள்முதல் நிலையங்கள்
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2024 செப்டம்பர் முதல் ஆகஸ்ட் மதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3703 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது சூழலில் நெல் வரத்து குறைந்துள்ளதால், 614 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்படுகின்றன.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு அரசின் நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில், கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் வழங்கும் விவசாயிகளுக்கு 100 கிலோ எடையுள்ள சன்னரக நெல்லுக்கு, 2450 ரூபாய் வழங்கப்படுகிறது. பிற வகை நெல்லுக்கு 2405 ரூபாய் வழங்கப்படுகிறது.
9305 கோடி ரூபாய் பணபட்டுவாடா !
தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை 38.34 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 9,350 கோடி ரூபாய் பணம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய சீசனில் இதே நேரத்தில், 28 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 10 மேற்கொள் முதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை தஞ்சாவூர், திருவாரூர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. டெல்டா இல்லாத மாவட்டங்களில் செங்கல்பட்டு மாவட்டம் 1.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கடுத்த இடத்தில் காஞ்சிபுரம் 1.08 லட்சத்தன் நெல் கொள்முதல் செய்து இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்தது எப்படி ?
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரும்பு மிக முக்கிய பயிராக விவசாயிகள் பயிர் செய்து வந்தனர். ஆனால் கரும்பிற்கு உரிய விலை கிடைப்பதில்லை உள்ளிட்ட காரணங்களால், செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவு இந்த ஆண்டு நெல் விவசாயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் டெல்டாவிற்கு அடுத்தபடியாக, ஒரே இடத்தில் 15000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலாவட்டம் பகுதியில் தற்போது 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் செமி குடோன் செயல்பாட்டில் உள்ளது. இதேபோன்று கீரப்பாக்கம் பகுதியில் புதிதாக 15000 மெட்ரிக் டன் செமி குடோன் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
டெல்டாவை தவிர்த்து ஐந்திடம் பிடித்த மாவட்டங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் 1.97 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.08 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1.05 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை பொறுத்த வரை 96 ஆயிரம் லட்சம் டன் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
வட மாவட்டத்தில் ஒன்றாக திருவள்ளூரில் 95 ஆயிரம் லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.39 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 83 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





















