சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதுள்ள 16 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது தாயார் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மீது இரண்டாவதாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது தாயார் கமலா தரப்பில் மனு தாக்கல் செயப்பட்டது.
சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தமிழ்நாடு அரசு சார்பில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது எனற பரிந்துரையை அரசு ஏற்றது என்றும் அவர் மீதான குண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ம்னோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும். அவர் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் சவுக்கு சங்கரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியே வந்தார்.