மேலும் அறிய

North Indians Safety : வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. திருப்பூர் எஸ்.பி. எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு இருப்பதாகவும், அவர்கள் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் வினீத்  தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு இருப்பதாகவும், அவர்கள் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் வினீத், காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்துள்ளனர். 

சமீபகாலமாக தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும்,  தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாலும்  திருப்பூரில் தொழில் பாதிக்கப்படுவதாக பல்வேறு தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினிடம் தொடர்ந்து மனு அளித்திருந்தனர். 

இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் ,  சமூக வலைதளங்களில் பரவுவது போல வட மாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் ஆட்சியர் வினீத் கூறினார். 

மேலும் வடமாநில தொழிலாளர்களை தவறாக சித்தரித்து அதிகமாக மூன்று வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் ஒரு வீடியோ திருப்பூரில் கடந்த ஜனவரி மாதத்தில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தகராறின் போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   மேலும் இரண்டு வீடியோக்கள் வேறு பகுதியில் நடந்தது. 

ஆனால் இவை அனைத்தும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்தது போல பரப்பப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வட மாநில தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏடிஎஸ்பி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார். 

இவர்கள் வட மாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார். அதேசமயம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து தங்கள் புகார்களை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மொழி பிரச்சனை ஏற்படாதவாறு  பல்வேறு மொழிகளை பேசக்கூடிய ஐந்து தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள பின்லாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே தொடர்ந்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

இந்நிலையில், இன்று பீகார் மாநில அனைத்துக் கட்சிக் குழு தமிழ்நாடு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்குழு தமிழ்நாடு அரசுடன் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வும் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஏதேனும் பிரச்சினையெனில் 94981-01300, 0421 - 2970017 என்ற சிறப்பு உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Karunas:
Karunas: "பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் கிடையாது" - நடிகர் கருணாஸ் ஆக்ரோஷம்!
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
Embed widget