மேலும் அறிய

ஹேப்பி நியூஸ்! மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன உபகரணம்.. சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், "21.06.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் 2024 2025-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் இன்னபிறவற்றுடன் கீழ்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:-

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்:

"அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்"

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், தனது கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் பிறருடைய உதவியின்றி எளிதாக நடமாடுவதற்குத் தேவையான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது என்றும் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்த நிலையிலும், நிற்றல், நடத்தல் உள்ளிட்ட உடலின் பல்வேறு நிலைகளிலும் நவீன இயன்முறை பயிற்சிகளுக்கு ஏதுவாக, பயனாளிகளுக்கு நவீன இயன்முறை சிகிச்சை உபகரணத்தை ஒரு உபகரணத்தின் விலை ரூ.10,000/- என்ற மதிப்பில் 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்திற்காக ரூ.1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு:

மேற்காணும் சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் செயற்குறிப்பினை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக செல்லவும் பள்ளி / மருத்துவமனை சென்று வரவும், வேறொருவர் துணையின்றி தன்னிம்பிக்கையுடன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக பல்வேறு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு அரசால் விலையில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு খ.10,000/- மதிப்புடைய நவீன இயன்முறை உபகரணங்கள் (Standing Frame) வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றிட ரூ.1,00,00,000/- (ரூ.10,000X1,000) நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது.

மேலே பத்தி 3-ல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினம் பின்வரும் மேலே பத்தி 3-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு "புதுப் துணைப்பணி" குறித்த செலவினமாகும். இதற்கு சட்ட மன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.பொ.-1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும் அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பதை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித் (வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித்(ச.ந/வ.செ.பொது-I) துறைக்கு அனுப்பிவைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget