திட்டங்கள் மக்களுக்கு சேர வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களிடம் திட்டங்களை சேர்க்க வேண்டும்:
மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஆய்வு கூட்டம்:
அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டமானது, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பங்கேற்பு:
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/572PVfIx9o
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 1, 2022
அறிவுறுத்தல்:
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறை சம்பந்தமான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார். மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
2 நாள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு:
“2ஆம் நாளாக டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளின் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 31, 2022
கடைமடை வரை காவிரி நீர் பாயும்! மகசூல் பெருகி உழவர்கள் நெஞ்சம் நிறையும்!” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/pN97dKn8Q0
2 நாள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வுக்காகச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று இரவு சென்னை வந்தாடைந்தார். இந்நிலையில் இன்று அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்