விளையாட்டு போட்டியில் ஜெயிக்கும் எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு விளையாட்டு மைதானம் - பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
’’நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களுக்குள் வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் தொகுதியிலே விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்'’
![விளையாட்டு போட்டியில் ஜெயிக்கும் எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு விளையாட்டு மைதானம் - பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு Sports Minister Meyyanathan's announcement at the assembly ground for the MLAs who will win the sports competition விளையாட்டு போட்டியில் ஜெயிக்கும் எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு விளையாட்டு மைதானம் - பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/06/e3e21323a6f0f871ef33f1d1dccb0951_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிருஷ்ணசாமி, பூந்தமல்லி எம்.எல்.ஏ: தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டம் கால்பந்தாட்ட குழுக்கள் அதிகமுள்ள மாவட்டம், ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாட்ட மைதானத்தை அமைத்து தர வேண்டும். பளுத்தூக்கும் வீரர்கள் நிறைந்துள்ள பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட காக்கலூர் கிராமத்தில் பளுத்தூக்கும் அகாடமி அமைக்கப்படுமா?
மெய்யநாதன், விளையாட்டுத்துறை அமைச்சர்: திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, திருவள்ளூர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாண்ட மைதானம் கேட்டுள்ளார்கள், கண்டிப்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். உறுப்பினர் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் காக்களூர் பகுதியானது பளுத்தூக்கும் வீரர், வீராங்கணைகள் நிறைந்த பகுதி. அங்குள்ள நகர செயலாளரின் மகள் கூட இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். கண்டிப்பாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காக்களூரில் பளுத்தூக்கும் அகாடமி அமைப்பதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக இந்தாண்டு பரிசீலிக்கப்படும்.
சட்டப்பேரவையில் நடந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூதான் - தங்கம் தென்னரசுவின் பேச்சால் அவையில் சிரிப்பலை
ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...! முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக அனைத்து வசதிகளும் கூடிய விளையாட்டு மைதானதானம் அமைப்பதற்கு இந்த அரசு ஆவண செய்யுமா?
சட்டப்பேரவையில் நடந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - கலை கல்லூரி நிரம்பி வழியுது.. இன்ஜினியரிங் காத்து வாங்குது.. MLAவுக்கு அமைச்சர் சொன்ன பதில்!
மெய்யநாதன், விளையாட்டுத்துறை அமைச்சர்: எதிர்க்கட்சித் தலைவர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக தனியாக விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா என கேட்டுள்ளார்கள். முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனேயே சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் பேட்மிட்டன் கோர்ட் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் உடற்பயிற்சி கூடம் விரைவில் நவீனப்படுத்தப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அளவில் செயல்படுத்தப்படும். நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களுக்குள் வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் தொகுதியிலே விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். (பேரவையில் சிரிப்பலை)
சட்டப்பேரவையில் நடந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - நீங்களும் காலேஜ் நடத்துறீங்க; நானும் நடத்துறேன்.. கஷ்டம் உங்களுக்கு தெரியும்! - பொன்முடியை கோர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)