நீங்களும் காலேஜ் நடத்துறீங்க; நானும் நடத்துறேன்.. கஷ்டம் உங்களுக்கு தெரியும்! - பொன்முடியை கோர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ
15 ஆண்டுகளுக்கு முன்னாள் 1 லட்சம் இருந்த ஃபீஸ் கட்டணம் 35 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. ஆனால் ஆசிரியர் சம்பளம் அதிகரித்துவிட்டது - கே.சி.கருப்பண்ணன்
பொறியியல் கல்லூரி நடத்த மிகவும் சிரமப்படுவதாகவும், பொறியியல் கல்லூரி நடத்துவதில் இருக்கும் விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏவுமான கே.சி.கருப்பண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, கே.சி.கருப்பண்ணன் எம்.எல்.ஏ இடையே சட்டபேரவை கேள்வி நேரத்தின் போது நடந்த உரையாடல்,
கே.சி.கருப்பண்ணன், எம்.எல்.ஏ: பேரவைத்தலைவர் அவர்களே...! மாண்புமிகு அமைச்சர் அவர்கள், பொறியியல் கல்லூரிகளை எல்லாம் மூடிக்கொண்டு இருப்பதாக கூறினார்கள். எங்களுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. நானும் அவரும் 10 அல்லது 15 ஆண்டுகளாக கல்லூரிகளை நடத்தி வருகிறோம். அந்த கஷ்டங்கள் எல்லாம் அமைச்சருக்கு தெரியும். வருடாவருடம் தேர்வு கட்டணம் ஏற்றி கொண்டே வருகிறார்கள், மாணவர்களின் சேர்க்கையை விட ஆசிரியர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என ஜி.ஓ போட்டு உள்ளார்கள், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சப்ஜெட்களை மாற்றி ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு வருகிறார்கள். மெக்கானிக்கல் துறையில் 120 சீட்டுகளை வைத்து இருக்கிறோம், 60 சீட் பில்லப் ஆகிறது; 60 சீட் அடுத்த ஆண்டு கூட பில்லப் ஆகும். ஆனால் மாணவர்களே இல்லாவிட்டாலும் ஆசிரியர்களை கணக்கு காட்ட வேண்டி உள்ளது. இதெல்லாம் கொஞ்சம் ரிலாக்ஸ்டேஷன் செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு முன்னாள் 1 லட்சம் இருந்த பீஸ் கட்டணம் 35 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. ஆனால் ஆசிரியர் சம்பளம் அதிகரித்துவிட்டது. இதையெல்லாம் மாண்புமிகு அமைச்சர்கள் அவர்கள் சரி செய்து கொண்டுத்தால் பொறியியல் கல்லூரிகள் திறம்பட நடக்கும்.
சட்டப்பேரவையில் நடந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - TN Assembly Live: சட்டப்பேரவை கேள்வி நேரம் - உறுப்பினர்களின் கேள்விகளும் அமைச்சர்களின் பதில்களும்...!
பொன்முடி, உயர்க்கல்வித்துறை அமைச்சர்: நேத்துதான் உங்கள் கட்சி உறுப்பினர் கேட்டார். தனியார் கல்லூரிகளில் பணம் கட்டாதவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள் என்று, நீங்கள் தனியார் கல்லூரிகளை நடத்தி வருகிறீர்கள், உங்கள் கஷ்டத்தை அவரிடம் சொல்லுங்க,
சுயநிதி கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது, அதற்கும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். நீங்கள் பாடத்திட்டத்தை அடிக்கடி மாற்றுவதாக கூறுகிறீர்கள், வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என்பதால் ஒரு சிலபஸ் கமிட்டியை முதல்வர் சொல்லி அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்கி உள்ளோம். வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப சிலபஸ்களை மாற்றும் வேலையை அவர்கள் செய்வார்கள்.
சட்டப்பேரவையில் நடந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - கலை கல்லூரி நிரம்பி வழியுது.. இன்ஜினியரிங் காத்து வாங்குது.. MLAவுக்கு அமைச்சர் சொன்ன பதில்!