Porkodi IAS: சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் மாற்றம்! புதிய கலெக்டர் பொற்கொடி ஐ.ஏ.எஸ்., யார் இவர் ?
Porkodi IAS Biography in tamil : " சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள, பொற்கொடி ஐ.ஏ.எஸ் குறித்து தெரிந்து கொள்வோம்"

தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவற்றுடன் 9 மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணிப்புரிந்து வந்த ஆஷா அஜித் ஊரக புத்தாக்கத் திட்ட தலைமை இயக்க அலுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்., - Asha Ajith IAS
ஆஷா அஜித் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். அவர் தனது ஆரம்பகால வாழ்க்கையில் கேரளாவின் கல்வி தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் போன்ற பணிகளைச் செய்துள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 40வது இடத்தைப் பிடித்தார். இவர் முன்பு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றினார். அங்கு மழைநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். திண்டுக்கல் மாவட்ட துணை ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷா அஜித், தற்போது தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை இயக்க அலுவலராகவும் (Chief Executive Officer, Tamil Nadu Rural Transformation Project) மற்றும் திட்ட இயக்குநர் - தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (Project Director, Tamil Nadu Women's Employment and Protection Scheme) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த பொற்கொடி ஐ.ஏ.எஸ். ? Papaorkodi IAS Profile
பொற்கொடி ஐ.ஏ.எஸ்., இவர் தற்போது சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
பொற்கொடி 2022 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்ற மாநில சிவில் சர்வீஸின் ஏழு உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, அவர் கலைஞர் மகளிர் உரிமைத் தோகை திட்டத்தின் துணை ஆணையராகப் பணியாற்றினார்.





















