Arunraj IAS: 22 வயதில் ஐ.ஏ.எஸ்.. பெரம்பலூர் புதிய ஆட்சியர்.. யார் இந்த அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் ?
Arunraj IAS Profile : "செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மாற்றப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்"

தமிழ்நாட்டில் இன்று 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் வேலை செய்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்தவகையில், 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் இ .ஆ .ப, மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்த அருண்ராஜ் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் ?
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., தேர்வில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்ச்சி அடைந்தவர். நெல்லை மாவட்டம், கயத்தாறு பகுதி பூர்வீகமாக கொண்டவர் அருண்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
2014- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற இவர், இந்திய அளவில் 34வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும் பெற்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண்ராஜ் கோச்சிங் சென்டர் செல்லாமலே, ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனது 22 வயதில் ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வாகி வரலாற்று புதியதோர் சரித்திரத்தை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு லிமிடெட் (ELCOT) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பதவி ஏற்றபோது, எளிய மக்களின் குரலாக ஒழிப்பேன் என பதவி ஏற்றிருந்தார். அதற்கேற்றார் போல் ஒரு சில மாற்றங்களையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்திருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் எளிதாக பழகக்கூடிய ஆட்சியராக இருந்தாலும், அருண்ராஜ் ஐ.ஏ.எஸ்., மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.




















