மேலும் அறிய

TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை

SIR Draft Roll Tamilnadu: திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், புதிதாக பெயர் சேர்க்க நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வாக்காளர் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வழங்கப்பட்ட SIR விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய இரண்டு முறை காலஅவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதியோடு இறுதி நாள் நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா.? புதிதாக பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்....

1.வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை எப்படி பார்க்க முடியும்?

தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில்,வாக்காளர்கள்‌ தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (EPIC Electoral Photo Identity Card) எண்னை பதிவு செய்து சரிபார்த்துக்கொள்ளலாம். 

2. புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படுமா.? 

வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்க பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறாது.

கண்டறிய இயலாதாவர்கள், முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் தனியாக வெளியிடப்படும். 

3. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.?  மீண்டும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.?

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள்  மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம். 

4. பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை யாரிடம் வாங்க வேண்டும்.? விண்ணப்பத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்?

 ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 50 படிவம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பம் 6 என்ற படிவத்தை பெற்று பூர்த்தி செய்து திரும்பவும் அவரிடமே வழங்க வேண்டும். 

5. வாக்காளர் பட்டியலில் எத்தனை நாட்கள் வரை காலஅவகாசம் .? சமர்பிக்க கடைசி நாள் எப்போது.? 

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிச.19-ம் தேதி முதல் ஐனவரி 18ம் தேதி வரை தங்களது ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். 

6.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள், தங்களது இருப்பிட முகவரி அல்லது தொகுதி மாற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமா?

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி, தொகுதி மாற படிவம் 8 சமர்ப்பிக்கலாம். 

7. புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் எப்போது வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்?

பெயர் சேர்த்தல், திருத்தல், ஆட்சேபனைகள் தொடர்பாக அனைத்து விண்ணப்பங்களும், பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

Frequently Asked Questions

வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம்?

தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in அல்லது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், பெயரைச் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை எங்கு பெறலாம் மற்றும் யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்?

ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமும் படிவம் 6-ஐ பெற்று, பூர்த்தி செய்து அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தம் செய்ய என்ன கால அவகாசம் உள்ளது?

டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம். தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17 அன்று இறுதி பட்டியலில் சேர்க்கப்படும்.

முகவரி அல்லது தொகுதி மாற விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், முகவரி அல்லது தொகுதி மாற்றம் செய்ய படிவம் 8-ஐ சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Embed widget