மேலும் அறிய

Seaman: மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்துவதை அரசு கைவிட வேண்டும்: சீமான்

Seaman; அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Seaman: அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மருத்துவமனைகள் பழைய கட்டிடங்களில் இயங்கும் நிலையில், புதிய கட்டிடங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கருவிகள் பற்றாக்குறையைத் தீர்க்க பலமுறை கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, அங்குப் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் மீது பழி சுமத்தி, அவர்களைப் பணியிடமாற்றம் செய்து தண்டிக்கும் எதேச்சதிகார போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசின் அமைச்சர்கள் பொதுமக்களையும், அரசுப் பணியாளர்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வது அதிகாரத் திமிரினை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மையேயாகும்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

கடந்த நான்கு மாதங்களாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதாக அரசு மருத்துவர்களே குற்றஞ்சுமத்தும் நிலையில் அவற்றை திமுக அரசு சரி செய்யாதது ஏன்?

பெரும்பாலான கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடிந்துவிழும் நிலையிலுள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் நிலையில், அவற்றை புதிய கட்டிடங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் ஏன் எடுக்கவில்லை?

திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளின் நிர்வாக வசதிக்கு போதிய நிதியை ஏன் ஒதுக்கப்படவில்லை?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, அரசு மருத்துவர்களுக்குப் பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊதிய உயர்வு இதுவரை ஏன் வழங்கவில்லை? அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்களை ஏன் பணி நிரந்தரம் செய்யவில்லை? என்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

கடந்த 55 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை முறையாகப் பேணவில்லை என்பதோடு, மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்கியதில் ஆளுங்கட்சியினர் செய்த ஊழல்களும், முறைகேடுகளும் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புக் குளறுபடிகளுக்கு முக்கியக் காரணமாகும். முதல்வர் முதல் மாமன்ற உறுப்பினர்கள் வரை தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனும்போது கோடிகளைக் கொட்டி தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்வதே, அவர்களால் நடத்தப்படும் அரசு மருத்துவமனைகளைத் தரமற்றதாக வைத்திருப்பதற்கான தக்கச் சான்றாகும். பொருளாதார வசதியற்ற பாமர மக்களின் உயிர் மீதான திராவிட அரசுகளின் அலட்சியமே போதிய மருந்துகள், மருத்துவக் கருவிகள் இன்றி அரசு மருத்துவமனைகளை முற்றாகச் சீரழித்துள்ளது.

எனவே, அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், மருத்துவர் – செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்யாமல், அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்க்காமல், வெற்று விளம்பர அரசியலுக்காக திடீரென அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், பணியிட மாற்றம் செய்வதும் ஏற்புடையதல்ல. அரசு தன் மீதான தவறுகளை மறைப்பதற்காக அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயமாகும்?

ஆகவே, வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget