மேலும் அறிய

Sanatana Dharma: சனாதன விவகாரம்: 'வாழ்த்துக்கள் அதிவீரன்..' அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்த மாரி செல்வராஜ்..

சனாதான சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் தி.மு.க. முக்கிய அங்கம் வகிக்கிறது. 

சனாதன சர்ச்சை:

இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் டெங்கு, மலேரியாபோல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். அவரது பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களும், இந்து அமைப்பினரும் கடும் கண்டனத்தையும் பதிவு செய்த நிலையில் வட இந்தியாவிலும் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் பதிவாகியுள்ளது.

பிரதமர் மோடி முதல் வட இந்தியாவில் உள்ள சாமியார்கள் வரை பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் தமிழ்நாட்டில் உதயநிதிக்கு பெருத்த ஆதரவு குவிந்து வருகிறது. திரைத்துறையில் இருக்கும் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதிக்கு மாரி செல்வராஜ் ஆதரவு:

திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய மாமன்னன் படத்தில் வரும் ஒரு காட்சியை பதிவிட்டு, உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு வாழ்த்துகள் அதிவீரன் என்று தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். அந்த படத்தில் வரும் காட்சியில் படத்தில் ஆதிக்க மனப்பான்மை நிறைந்த ரத்னவேலு கதாபாத்திரம் துப்பாக்கியை காட்டி நிற்க, அதை கண்டுகொள்ளாமல் நாய்கள் எதிர்த்து ஓடும். பின்னர், காரில் அமர்ந்திருக்கும் ரத்னவேலுவை பார்த்து அதிவீரன் இனிமேல் உன் உருட்டல் மிரட்டலுக்கு யாரும் பயப்பட போறதில்ல. அவன் அவன் அவன் திசையை நோக்கி ஓடிட்டேதான் இருப்பான் என்று வசனம் அமைந்திருக்கும்.

பின்னர், படத்தின் இறுதிக்காட்சியில் வரும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற குறளையும் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் சாதிய பாகுபாட்டை நன்றாக தோலுரித்துக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தது. உதயநிதி ஸ்டாலினின் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் நற்பெயரை பெற்றுத் தந்ததுடன்,  தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சனாதன சர்ச்சை விவகாரத்தில் நேற்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது மாரிசெல்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் காவல் நிலையங்களிலும் இந்து அமைப்பினரும் பா.ஜ.க.வினரும் புகார் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Sanjay Raut On Udhayanidhi: ”மு.க.ஸ்டாலினை நாடே உற்று பார்க்கிறது, உதயநிதி?” - சனாதன விவகாரத்தில் சிவசேனா எம்.பி. கருத்து..!

மேலும் படிக்க: Sanatana Dharma Row: சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிடக்கூடாதாம்; இன்னும் கடுமையாக சாடிய ஆ.ராசா!

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget