மேலும் அறிய

Sanatana Dharma Row: சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிடக்கூடாதாம்; இன்னும் கடுமையாக சாடிய ஆ.ராசா!

Sanatan Dharma Row: “சனாதன தர்மத்தைக் கடைபிடியுங்கள் என பிரதமர் சொல்கிறார். அவர் கடைபிடித்திருந்தால் இத்தனை வெளிநாடுகளுக்குப் போயிருக்கக் கூடாது.”- ஆ.ராசா

சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வி-யைப்போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும் என்று எம்.பி., ஆ. ராசா பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. 

சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, ” கொசு, டெங்கு, காயச்சல், மலேரியா, கொரோனா இதையேல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனதானம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது” என்று பேசியிருந்தது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் ’விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், எம்.பி., ஆ. ராசா சனாதனம் எச்.ஐ.வி,., தொழுநோய் போன்றது என்று குறிப்பிட்டு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசுகையில், “ சனாதன தர்மமும் விஸ்வகர்மா திட்டமும் வெவ்வேறு அல்ல. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் விவாதபொருளாகியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியாக இதை கருதலாம். உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் சொன்னார். சனாதனத்தை மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். மலேரியாவையும், டெங்குவையும் சமூகம் அருவருப்பாகப் பார்க்காது. ஆனால் சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வி-யைப்போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நான் கடுமையானவே சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு ஊர் சுற்றுவதே வேலை!

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி குறிபிட்டு பேசிய ஆ.ராசா ”சனாதன தர்மத்தைக் கடைபிடியுங்கள் என பிரதமர் சொல்கிறார். அவர் கடைபிடித்திருந்தால் இத்தனை வெளிநாடுகளுக்குப் போயிருக்கக் கூடாது. ஒரு நல்ல இந்து, கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு ஊர் சுற்றுவதே வேலை. சனாதன தர்மத்தை மீறி ஊர் சுற்றும் ஒரு ஆள், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?.”  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விவாதிக்க தயாரா?

சனாதனம் தர்மம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயாரா என்று ஏற்கனவே ஆ.ராசா சாவல் விடுத்திருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் பா.ஜ.க.-வை விவாதத்திற்கு அழைத்தார். “ நேற்றைக்கு நான் பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விட்டேன். சனாதனம் பற்றி விவாதம் நடத்துங்கள். 10 லட்சம் பேரை, 1 கோடி பேரை டெல்லியிலே திரட்டுங்கள். உங்கள் எல்லா சங்கராச்சாரியார்களையும் மேடையில் உட்கார வையுங்கள். உங்களிடம் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். வில், அம்பு, கத்தி, கொடுவாள் எல்லாவற்றையும் நிற்க வையுங்கள். நான் வெறும் பெரியார், அம்பேத்கர் புத்தகங்களோடு வருகிறேன். என்னை ஜெயித்துப் பார். நீங்கள் எல்லாம் மகா விஷ்வ குரு. உங்கள் பார்வையில் நான் சாதாரண பஞ்சம சூத்திரன். எனக்கு இந்தி தெரியாது; ஆங்கிலத்தில்தான் பேசுவேன். உங்களுக்குப் புரியவில்லை என்றால் நான் பொறுப்பல்ல. சனாதனத்திற்கு எதிரான எங்கள் கருத்தை எதிர்த்துப் பேசுவதற்கு உங்கள் தரப்பில் யாராவது ஆள் இருந்தால் டெல்லியில் எங்கு வேண்டுமானாலும் நாள் குறியுங்கள். ஆ.ராசா வருவதற்குத் தயாராக இருக்கிறேன்.” என்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

”சனாதன இந்து வேறு, சாதாரண இந்து வேறு என்று நான் பேசினேன். ஐயோ, இந்துக்களை பிரித்து விட்டார் ஆ.ராசா என்று 12 மொழிகளில் மொழிபெயர்த்து பரப்பி விட்டார்கள். இங்கே தொடங்கியுள்ள போராட்டம் அடுத்த பத்தாண்டு காலத்தில் முழு சமதர்ம மதச்சார்பற்ற நாடு என்பதை உணர்வோடு உருவாக்கும் காரியத்திற்கான தொடக்கத்திற்கான இது அமையும்.” என்றார்.

"அம்பேத்கர் சொன்னார்; எல்லா நாடுகளிலும் கார்பென்டர் இருக்கிறார். தச்சு வேலை செய்பவர் இல்லையா? லண்டன் போங்க. ' Gold Smith' கடை போட்டிருப்பாங்களே.? அதெல்லாம் சாதியா என்ன? தொழிலைப் பிரிப்பதென்பது ஒரு சமூகத்திற்கு தேவை. என் சட்டைக்கு நானே பருத்திப்போட்டு, நெசவு, டெய்லர் ஆகி நானே தைய்த்து போடனும் என்றால், நாம் அனைவரும் அம்மணமாகதான் திரிய வேண்டும். முடியாது. நம்முடைய தேவைகளை நிறைவேற்ற இன்னொருவன் பணி செய்ய வேண்டும். அதுதான் சமூக அமைதி- 'Social  harmony'. ’Division of Labourer‘ என்பதை சாதியோடு, குலத்தொழிலோடு முடிச்சிப்போட்டு, இவனுடைய மகன் இதுதான் செய்ய வேண்டும் விரோதத்தை என்பதை மதம் செய்து என்று அம்பேத்கர் நுட்பமாக ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார். இதில் மேல் சாதியினரின் தொழில் நல்ல தொழில்; கீழே போகபோக சமூக இழிவுத்தொழில் என்று உருவாக்கிய ஒரே மதம் இதுதான். (இந்து) சாதியை காப்பாற்றுவது, மதத்தைக் காப்பாறுவதோடு மட்டுமல்லால், இதை ஓர் இந்து ராஷ்டரமாக வைத்துகொள்ள வேண்டும் என்பதுதான்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget