மேலும் அறிய

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

14-08-2026: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

15-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான  மழை பெய்யக்கூடும்.

16-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

17-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

18-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

19-08-2026: தேனி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

20-08-2026: தேனி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

14-08-2026 முதல் 18-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

14-08-2026 முதல் 18-08-2026 வரை: வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (14-08-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (15-08-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget