மேலும் அறிய

Covid 19 Spike in Tamilnadu: தினசரி பாதிப்பு அதிகரிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒருவார கால விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை முதல்வர் நாளை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   

கொரோனா தினசரி பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  மாநில சுகாதாரத்துறை செயலாளர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒருவார கால விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை முதல்வர் நாளை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிகரிக்கும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை: 

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 70 நாட்களுக்குப் பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட தினசரி பாதிப்பு எண்ணிக்கை, அதற்கு முந்தைய நாட்களை விட அதிகரித்து காணப்படுகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் சென்னை, ஈரோடு,தஞ்சாவூர், கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், சென்னையின் தொற்று உறுதி விகிதம் 0.7 ஆக உள்ளது. தினசரி பரிசோதனை சராசரியாக 24,000க்கும் குறையாமல் உள்ளது. 

ஜூலை 29 181
ஜூலை 28 164
ஜூலை 27 139 
ஜூலை 26 122 
ஜூலை 25 126 
ஜூலை 24 127 
ஜூலை 23 130 
ஜூலை 22 133 
ஜூலை 21 138 
ஜூலை 20 141 
ஜூலை 19 147  

தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தற்போது அதிக தினசரி பாதிப்புகளை பதிவு செய்யும் இரண்டாவது மாவட்டமாக சென்னை உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையில், கோயம்பத்தூர் முதலிடத்திலும், ஈரோடு மூன்றாவது இடத்திலும் உள்ளன. தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடந்கியுள்ளது. 

அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 1.54 லட்சம் பேர் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பில் இது 37.1% ஆகும். கடந்த 7 நாட்களில் இந்த எண்ணிக்கை 1.41% வளர்ச்சியடைந்துள்ளது. சராசரி தினசரி பாதிப்புகள் இந்த மாநிலத்தில் 17,443 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் 12.93% ஆகவும், வாராந்திர விழுக்காடு 11.97% ஆகவும் உயர்ந்துள்ளது. 6 மாவட்டங்களில் வாராந்திர நோய்த்தொற்று உறுதி விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது.

கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட 17 நாட்களுக்குப் பிறகு, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000-ஐக் கடந்தது. குறிப்பாக, கேரளா எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 

Covid 19 Spike in Tamilnadu: தினசரி பாதிப்பு அதிகரிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த ஜூலை 7ம் தேதிக்குப் பிறகு, பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த நான்கு வாரங்களாக, நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர்               

மேலும் வாசிக்க: 

ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்' 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget