மேலும் அறிய

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வார்டு கவுன்சிலர் பதவிகள் யாருக்கு - பட்டியல் வெளியீடு

’’உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது’’

விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22 ஆம் தேதி ஆகும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டத்தில் எங்கெங்கு தேர்தல் நடைபெறும், இரண்டாம் கட்டத்தில் எங்கெங்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, மாவட்டங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகள்,  ஊராட்சி ஒன்றிய வார்டுகள்,  கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கிய  ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியல் விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம்

  1. ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 7, 8, (எஸ்.சி. பெண்கள்)
  2. மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 9 (பெண்கள் பொது)
  3. கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 28 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 27 (பெண்கள் பொது)
  4. மயிலம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 6 (எஸ்.சி. பொது), வார்டு எண் 5 (பெண்கள் பொது)
  5. முகையூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 15 (எஸ்.சி. பொது), வார்டு எண் 13, 14 (பொதுப்பிரிவினர்)
  6. வானூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 21, 22 (எஸ்.சி. பொது), வார்டு எண் 20 (பெண்கள் பொது)
  7. மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 1, 2 (பெண்கள் பொது)
  8. செஞ்சி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 11 (பெண்கள் பொது), வார்டு எண் 12 (பொதுப்பிரிவினர்)
  9. விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 19 (பெண்கள் பொது), வார்டு எண் 18 (பொதுப்பிரிவினர்)
  10. கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 23, 24 (பெண்கள் பொது)
  11. வல்லம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3, 4 (பொதுப்பிரிவினர்)
  12. காணை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 16, 17 (பொதுப்பிரிவினர்)
  13. திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 25, 26 (பொதுப்பிரிவினர்)

கள்ளக்குறிச்சி மாவட்டம்

  1. கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10 (எஸ்.டி. பெண்கள்)
  2. சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 12 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 11 (பொது)
  3. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 13, 14 (எஸ்.சி. பெண்கள்)
  4. உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 17 (எஸ்.சி. பெண்கள்), வார்டு எண் 15, 16 (பெண்கள் பொது)
  5. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 4 (எஸ்.சி. பொது), வார்டு எண் 3 (பெண்கள் பொது), வார்டு எண் 5 (பொது)
  6. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 8, 9 (எஸ்.சி. பொது)
  7. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 1, 2 (பெண்கள் பொது)
  8. திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 6, 7 (பொது)
  9. திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 18, 19 (பொது)
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget