Then Pennai River: சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றிற்கு நீர் திறப்பு.. ஆனந்த குளியல் போட்ட சிறுவர்கள்!
சாத்தனூர் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பில்லூர் தரைப்பாலத்தின் மேல் செல்லும் ஆற்று நீரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல்.
விழுப்புரம்: சாத்தனூர் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பில்லூர் தரைப்பாலத்தின் மேல் செல்லும் ஆற்று நீரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது.
AIADMK Meeting LIVE: பாஜவுடனான கூட்டணி வேண்டாம் - மாவட்டச் செயலார்கள் வலியுறுத்தல்..!
இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அனைக்கு வினாடிகு 1000 ஆயிரம் கன அடி வீதம் வந்து வந்து கொண்டிருக்கிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் தொடர்ந்து அனைக்கு நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது.
லேசான நீர்வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் மீண்டும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1000ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சாத்தனூர் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் அணைக்கு வரும் 1000 ஆயிரம் கன அடி நீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் இரு கறைகளும் அனைத்தப்படி ஆர்ப்பரித்து செல்கிறது.
இதன் காரணமாக தென்பென்னை ஆற்று நீரானது விழுப்புரம் வழியாக தளவானூர், எல்லிச்சதிரம், சேதமடைந்த தடுப்பனைகள் வழியாக ஆற்று நீர் வீணாக கடலூரில் கடலில் கடக்கிறது. தென்பென்னை ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றிலும் சாத்தனூர் அனை நீர் செல்கிறது. இதன் காரணமாக பில்லூர் தரைப்பாலத்தில் ஆற்று நீர் மூழ்கி செல்லுகிறது. தரைப்பாலத்தில் ஆற்று நீர் செல்வதால இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்கள் முழங்கால் அளவிலான நீரில் செல்கின்றன. இன்று விடுமுறை நாள் என்பதால் தரைப்பாலத்தின் மேலே செல்லும் நீரில் ஏராளமான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆற்று நீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர். தரைப்பாலத்தின் கீழ் பகுதி ஆழமான பகுதியாக இருந்தாலும் சிறியவர்கள் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். இதனால் பில்லூர் தரைப்பாலத்தின் மேலே செல்லும் நீரை பார்க்கவும் அதில் குளிக்கவும் அப்பகுதியினர் வருகை புரியவதால் பில்லூர் தரைப்பாலம் மினி குற்றாலம் போல் மாறியுள்ளது.