அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டது. உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 1 முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு, 2,200 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு.
அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் காலை குறைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 1ஆம் தேதி முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வினாடிக்கு, 2,200 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. ஆனால், கேரளா உள்ளிட்ட, நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது. காலை 8:00 மணி நிலவரப்படி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 175 கன அடியில் இருந்து, 150 கன அடியாக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தற்காலிகமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அமராவதி அணைக்கு வினாடிக்கு காலை, 198 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 47.84 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, காலை வினாடிக்கு, 9,565 கனஅடி தண்ணீர் வந்தது. டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 8,945 கன அடியும், கீழ்கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.13 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.