Red Alert: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. அதி கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு, அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல் சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் அதி கன மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
ரெட் அலர்ட்:
இந்நிலையில் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில், 2 நாட்களுக்கு அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதால், வானைலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 2, 2022
7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் நீலகிரி, ஈரோடு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 2, 2022
11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:
தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/MpKXEWGDcV
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 2, 2022
சென்னை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 2, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 2, 2022
வானிலை மைய இயக்குநர்:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கேரளவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது மேலும் தமிழகத்தின் வளிமண்டல் பகுதியில் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது இந்த பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகர கூடும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது 10 இடங்களில் கனமழையும் நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 cm மழை பதிவாகியுள்ளது என்ற அவர், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்