மேலும் அறிய

Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..

மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி: மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் புதுச்சேரி ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புதுச்சேரி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7,000 ஆக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் சம்பள முறையைப் பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும், இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, புதுச்சேரி அரசில் பணிபுரியும் 'குரூப் பி' மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7,000 கிடைக்கும். மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தீபாவளி போனஸ் தொடர்பான உத்தரவு நகலை அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன், அகவிலைப்படி (DA) 42% ஆக இருந்தது. மத்திய அரசு தற்போது வழங்கிய ஒப்புதலை தொடர்ந்து, ஜூலை 1, 2024 முதல் அகவிலைப்படி ஆனது 45 சதவிகிதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு

3% அகவிலைப்படி (DA) அதிகரிப்புடன், தொடக்க நிலை மத்திய அரசு ஊழியர், மாதத்திற்கு சுமார் ரூ. 18,000 தொடக்கச் சம்பளத்துடன், ஜூலை 1, 2024 முதல் மாதத்திற்கு சுமார் ரூ.540 அதிகமாக பெறுவார். ஊழியருக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கிடைக்கும். இந்த தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான நன்மைகளை சேர்க்கும்.

வேலை செய்யும் ஊழியர்கள் DA பெறும் போது, ​​ஓய்வூதியம் பெறுவோர் அகவிலை நிவாரணம் பெற தகுதி பெறுகின்றனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதத்துக்கான DA திருத்தமானது 4% உயர்வுடன் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 50% DA பெற தகுதி பெற்றனர். அதே சமயம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 50% DR பெற தகுதி பெற்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் ரூ.1 கோடி பேருக்கு பலன்:

ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய அமைப்பில் அகவிலைப்படி (DA) முக்கிய பங்கு வகிக்கிறது. இது பணவீக்கத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பை வழங்குகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (CPI) சம்பளத் திருத்தங்களைச் செய்வதன் மூலம், பணவீக்கத்தின் போது, ​​அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப, ஊழியர்களின் இழப்பீட்டுத் தொகையானது ஒரு நிதி நிலைத்தன்மையை வழங்குகிறது.

ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மத்திய அரசால் ஆண்டுக்கு இரு முறை அதிகரிக்கப்படுகிறது. அது ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அமல்படுத்தப்படுகிறது. பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பரில் அறிவிப்புகள் வெளியிடப்படும். ஜனவரி DA டிஏ உயர்வு பொதுவாக மார்ச் மாதத்தில் ஹோலி நேரத்தில் அறிவிக்கப்படும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பரில் தீபாவளியை ஒட்டி ஜூலை உயர்வு அறிவிக்கப்படும்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
4 மாநிலங்கள்.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் அளிக்குமா இந்தியா கூட்டணி?
4 மாநிலங்கள்.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் அளிக்குமா இந்தியா கூட்டணி?
Stalin Criticize EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
அடுத்த வருஷத்திற்கு இப்பவே ரெடி.. கம்பேக் கொடுத்த சிஎஸ்கே.. குஜராத் கதை ஓவர்! 
பங்காளிக்கு போட்டு கொடுத்த சிஎஸ்கே.. குஜராத் கதை ஓவர்.. அடுத்த வருஷத்திற்கு இப்பவே ரெடி
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
MS Dhoni Retires: வருவாரா? மாட்டாரா? சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தோனி!
Embed widget