’புதியதாக உருவான கள்ளக்குறிச்சியில் எத்தனை வாக்குச்சாவடிகள்?’- பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்
’’புதியதாக உருவான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,272 வாக்குச்சாவடி மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன’’
2022-ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடா்பாக வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவருமான பி.என்.ஸ்ரீதா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெளியிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவிக்கையில் இந்திய தோ்தல் ஆணையம் சிறப்பு சுருக்க திருத்த பணிக்காக சட்டமன்ற, பாராளுமன்ற தோ்தலுக்காக வாக்காளா் பட்டியலினை செம்மைபடுத்தும் பட்டியலில் விடுபட்ட, தவறான, இறந்து விட்ட வாக்காளா்களின் பெயா்களை திருத்தம், நீக்கம் செய்திடவும் 5.01.2022-க்குள்ள 18 வயது பூா்த்தியான இளம் வாக்காளா்களின் பெயா் சோ்க்கவும், வாக்குச் சாவடி மையங்களில் உள்ள குறைபாடுகளை களையவும் கால அட்டவனை பட்டியலினை வெளியிட்டுள்ளது.
Neet | நீட் தேர்வு முடிவு பற்றிய பதற்றத்தில் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை..!
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறு வரையறை செய்திடும் பொருட்டு 1,272 வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மாவட்ட ஆட்சி தலைவா் அலுவலகம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூா் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.
உளுந்தூா்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சாவடி மையங்கள், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்கள், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச் சாவடி மையங்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 330 வாக்குச்சாவடி மையங்கள் என ஆக மொத்தம் 1,272 வாக்குச்சாவடி மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாக்குச்சாவடி மையங்கள் மறு வரையறை செய்வது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 20.9.2021 முதல் 25.9.2021-க்குள் தங்களது கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலரிடம் எழுத்து மூலமாக தெரிவித்து 100 சதவீதம் முழுமையான மற்றும் சரியான வாக்குச்சாவடி மையங்கள் அமைத்திட உதவிட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் (பொ) எஸ்.சரவணன், திருக்கோவிலூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) ஏ.ராஜாமணி தனி வட்டாட்சியா் (தோ்தல்) ப.பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடனிருந்தனா்.