மேலும் அறிய

Covid Cases: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா! தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கா? அரசு தரப்பு சொல்வது என்ன?

கேரளாவில் கொரோனா தொற்று பரவுவது குறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா

கடந்த 2020 ஆம் உலகநாடுகளை பெரும் துயருக்கு ஆளாக்கிய கொரோனா தொற்றை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. 

மார்ச் மாதம் தொடங்கி கிட்டதட்ட 5 மாதங்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள், மாஸ்க் கட்டாயம், பொருளாதார இழப்பு என பல இன்னல்களை மக்கள் சந்தித்தனர். இந்த பிரச்சினை அத்தோடு தீர்ந்து விட்டதா என்றால் அதுதான் இல்லை. 2021 ஆம் ஆண்டு 2.0 வெர்ஷன் போல மீண்டும் மே மாதத்தில் கொரோனா பரவ தொடங்கியது. முதல் தடவை கிடைத்த அனுபவத்தில் மக்கள் சுதாரித்து கொண்டனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை எடுத்து ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அனைத்திலும் இருந்து விரைவில் வெளியே வந்தனர். 

கொரோனா தொற்று 90% குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் மீதமுள்ள 10% தொற்று ஆங்காங்கே உருமாறி பரவி தான் வருகிறது.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பானது தற்போது 3 இலக்கங்களில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கூட 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கேரளாவில் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கைகளை கையாள தொடங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்படுமா?

இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்மருத்துவக் கல்லூரியில் இளநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கான  செயற்கை பல்மருத்துவம், ஈறு அருவை சிகிச்சை மற்றும் பல் பாதுகாப்பு, வேற் சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி  துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ”தற்போது இன்புளுன்சா வைரஸ் காய்ச்சல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பருவமழை தொற்று ஏற்பாடமல் தடுக்க தினந்தோறும் 300 இடங்களில் மருத்துவ முகாம்  நடைபெற்று வருகிறது. இன்புளுன்சா தொற்று ஏற்பட்டவர்கள் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும். கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் அச்சமடைய தேவயில்லை. இதுவரை எந்தவொரு அசாதாரணமான காய்ச்சலும் கண்டறியப்படவில்லை. தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.  மக்களும் முன்னெச்சரிக்கையாக தற்காப்பாக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget