மகிழ்ச்சியில் மாணவர்கள்! தொடர்ந்து 3 நாள் விடுமுறையா? - ஜூலை 7 விடுமுறை ஏன் தெரியுமா?
Muharram 2025: "மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை ஏழாம் தேதி பொது விடுமுறை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன"

இஸ்லாமியப் புத்தாண்டு மொஹரம் ஜூன் 27 ஆம் தேதியான அன்று தொடங்கிய நிலையில், ஜூலை 6 ஆம் தேதி மொஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசு விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மொஹர்ரம் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படுமா? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. அப்படி திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொஹர்ரம் பண்டிகை 2025 எப்போது கொண்டாடப்படுகிறது?
இந்தியாவைப் பொறுத்தவரை மொஹரம் பண்டிகை அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோன்று அரசு அலுவலகங்களும் விடுமுறை விடப்படுகிறது. வங்கிகளுக்கும் மொஹரம் பண்டிகை பண்டிகை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது அதிகாரப்பூர்வ தகவலாக ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மொஹரம் பண்டிகை என்பது நிலவை அடிப்படையாக வைத்து, கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. எனவே இஸ்லாமியர் விதிபடி மொஹர்ரம் பண்டிகை ஜூலை 6 கொண்டாடப்படுமா அல்லது ஜூலை 7 கொண்டாடப்படுமா என்பது, இயற்கையின் கையிலே உள்ளது. எனவே, சந்திரன் பிறை தென்படுவதை கணக்கிட்டு மொஹரம் பண்டிகை ஞாயிறு அல்லது திங்கட்கிழமை கொண்டாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு திங்கட்கிழமை கொண்டாடப்படும் பட்சத்தில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திங்கட்கிழமை விடுமுறை குறித்து இதுவரை அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொஹரம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது ?
மொஹரம் பண்டிகை என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமாக பார்க்கப்படுகிறது. மொஹரம் மாதம் தூவங்குவதை கொண்டாடும் விதமாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்படி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறதோ, அதேபோன்று இஸ்லாமியர்களுக்கு மொஹரம் பண்டிகை புத்தாண்டு தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தின் 10 ஆம் நாள் 'ஆஷூரா' என்று அழைக்கப்படுகிறது. சன்னி இஸ்லாமியர்கள் இந்த நாளில் மூஸா நபிக்கு (மோசஸ்) கிடைத்த வெற்றியின் நினைவாக நோன்பு நோற்கின்றனர். ஆனால், ஷியா இஸ்லாமியர்களுக்கு, இந்த நாள் துக்க நிகழ்வாக அனுசரித்து வருகின்றனர். மொஹரம் மாதம் இஸ்லாமியர்களுக்கு ஒரு புனித மாதமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுகளின் மாதமாகவும் விளங்குகிறது.





















