PTR Palanivel: பெட்ரோல் விலை குறைப்பு .. இது தான் கூட்டாட்சியா? - மத்திய அரசை விளாசும் நிதியமைச்சர் பிடிஆர்
பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
![PTR Palanivel: பெட்ரோல் விலை குறைப்பு .. இது தான் கூட்டாட்சியா? - மத்திய அரசை விளாசும் நிதியமைச்சர் பிடிஆர் PTR Palanivel Thiagarajan mocks at Central government for asking states to cut tax on petrol and diesel PTR Palanivel: பெட்ரோல் விலை குறைப்பு .. இது தான் கூட்டாட்சியா? - மத்திய அரசை விளாசும் நிதியமைச்சர் பிடிஆர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/22/605f6677ad66b4a7d215b25c52766cff_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான கலால் வரியை மத்திய அரசு நேற்று குறைத்தது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாய் வரை குறைத்தது. அத்துடன் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை குறைத்தது. இதன்காரணமாக இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பெட்ரோலின் விலை இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிடும் போது மாநில அரசுகள் தங்களுடைய வரியை குறைக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
🤔The Union Government didn't INFORM, let alone ASK for ANY state's view when they INCREASED Union taxes on Petrol ~23 Rs/ltr (+250%) & Diesel ~29 Rs/ltr (+900%) from 2014
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 21, 2022
Now, after rolling back ~50% of their INCREASES, they're EXHORTING States to cut
Is this Federalism ? https://t.co/moYsfqHtdL
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக பெட்ரோலின் விலையை சுமார் 23 ரூபாய் வரை (250%) உயர்த்தியுள்ளது. அதேபோல் டீசலின் விலையை சுமார் 29 ரூபாய் வரை(900%) உயர்த்தியுள்ளது. இந்த அளவிற்கு விலையை ஏற்றும் போது மாநிலங்களிடம் ஒரு தகவல் கூட சொல்லவில்லை
தற்போது அதில் 50% விலையை மட்டும் குறைந்துவிட்டு மாநிலங்களை தங்களுடைய வரியை குறைக்க சொல்வது எப்படி நியாயம். இது தான் கூட்டாட்சி தத்துவமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த மாதம் பெட்ரோல், டீசலுக்கான் வரியை மாநில அரசுகள் குறைப்பதில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அப்போதும் அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில், “திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெட்ரோலுக்கான வாட் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைத்தது. இதன்காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு தோறும் சுமார் 1,160 கோடி ரூபாய் வரை வருமானம் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் மக்களின் நலன் கருதி இதை மாநில அரசு செய்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது முதல் கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்கு வரும் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் மாநிலங்களுக்கு அதன்மூலம் வரும் வருமானம் குறைந்து வருகிறது.
ஏனென்றால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான செஸ்(Cess) மற்றும் சர்ஜார்ஜ்(Surcharge) ஆகியவற்றை ஏற்றிவிட்டு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் கலால் வரியை குறைத்து வருகிறது. செஸ்(Cess) மற்றும் சர்ஜார்ஜ்(Surcharge) ஆகிய இரண்டும் மாநில அரசுகளுடன் பகிரப்படாது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)