மேலும் அறிய
Advertisement
Premalatha Vijayakanth: விஜயகாந்துக்கு கோயில்.. மெரினாவில் உள்ள தலைவர்கள் சமாதி போல் மாற்றுவோம்.. பிரேமலதா உருக்கம்!
Vijayakanth: கையில் அணிந்திருந்த மோதிரத்துடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Vijayakanth: விஜயகாந்த் மறைவுக்கு 2 நாட்களாக ஆதரவு அளித்து, துக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கட்சி தொண்டர்களின் பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மோசமான உடல்நிலை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் கட்சி தொண்டர்களிடையே மிகவும் உருக்கமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். “தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அவருக்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க தேமுதிக தலைவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடல் சந்தனப்பேழையில் வைத்து சிறப்பான முறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தலைவர் கையில் போட்டு இருக்கும் மோதிரத்துடன் அவர் கையிலேயே இருக்கட்டும் என்று, அந்த மோதிரத்தோடு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தலைவரை இழந்த இந்த சோகமான சூழலில் உடனிருந்து ஆதரவளித்த கட்சித் தொண்டர்களுக்கு பாதம் பணிந்து உங்கள் அண்ணியாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி மெரினாவில் ஒவ்வொரு தலைவருக்கும் சமாதி அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் இந்த இடத்தில் விஜயகாந்திற்கு சமாதி அமைக்கப்படும். அவரது புகைப்படம் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் தீபம் ஏற்றப்பட்டு கோயிலாக இந்த இடம் இருக்கும்.
தலைவர் எங்கும் போகவில்லை. அவர் நம்பக்கூட தான் உள்ளார். அவர் தர்மம் செய்தவர். அவரது ஆன்மா சொர்க்கத்துக்கு தான் சென்றிருக்கும். கட்சித் தொண்டர்களுக்கும் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion