முதல்வர் கான்வாய்க்குள் பைக்குடன் புகுந்த இளைஞர்! பதறிய போலீசார்! விசாரணையில் திடுக் தகவல்!
சந்தேகத்தை வரவழைக்கும் வகையில் அந்த இளைஞரின் பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை. இதனால் துரிதமாக செயல்பட்ட போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்
முதல்வரின் கான்வாயைத் சென்றுக்கொண்டிருக்கும்போது திடீரென எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கான்வாய்
சென்னை காமராஜ் சாலையில் முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் சென்றுகொண்டிருந்தது. தலைமைச் செயலகத்தில் இருந்து தன்னுடைய வீட்டுக்கு முதல்வர் கார் வழக்கமான பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க கான்வாய் சென்றுள்ளது. அப்போது நேப்பியர் பாலத்தை கடந்து சென்ற நிலையில் திடீரென சாலையில் எதிர்த்திசையில் இருந்து ஆக்டீவா இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் திடீரென குறுக்கே வந்தார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.
சந்தேகம்..
சந்தேகத்தை வரவழைக்கும் வகையில் அந்த இளைஞரின் பைக்கில் நம்பர் பிளேட்டும் இல்லை. இதனால் துரிதமாக செயல்பட்ட போலீசார் பைக்கை பறிமுதல் செய்து இளைஞரிடம் தீவிர விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இளைஞர் சென்னை கேகே நகரைச் சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் அஜித்குமார் பயன்படுத்திய பைக் திருட்டு பைக் என தெரிவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்டா
முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி இரண்டு நாட்களாக ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த முதல்வர், திருச்சி, தஞ்சை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தாண்டிற்கான குறுவை பருவ நெல் சாகுபடி டெல்டா மாவட்டங்களில் துவங்கி உள்ளது. இதற்காக, முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக கடந்த 24 -ம் தேதி, குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்வதற்காக, 80 கோடி ரூபாயில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுவரை 4,000 கி.மீ., தூர்வாரப்பட்டு உள்ளது. மேலும், 900 கி.மீ க்கு மேல் தூர்வார வேண்டி உள்ளது. அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நிறைவுடையும் நிலையிலும் உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்