மேலும் அறிய

Ramadoss Statement: தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டம் இயற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தைப் பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படுமா? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான தமிழக அரசின் நிலை குறித்து முரண்பாடான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பை வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. தமிழக அரசால் வழங்கப் படவுள்ள பரிசுப் பையின் மாதிரி சமூக ஊடகங்களில் வலம் வருவதும், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரில் இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் தான் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கல் பரிசுப் பையில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போன்று தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க தமிழக அரசு தீர்மானம் செய்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. அதனால் மகிழும் முதன் மனிதன் நானாகத் தான் இருப்பேன்.

Ramadoss Statement: தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டம் இயற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

ஆனால், கடந்த 3-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த 2022-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் ஏப்ரல் 14-ஆம் நாள் வியாழக்கிழமை தான் தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு விஷயத்தில் தமிழ்நாடு அரசு இருவிதமான நிலைப்பாடுகளை இதுவரை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவற்றில் எதை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஏப்ரல் 14-ஆம் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியாகியுள்ள பொங்கல் பரிசுப் பை படத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதால் இந்தக் குழப்பம் அதிகரித்திருக்கிறது. இதை அரசு தான் தீர்க்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் சான்றுகள் உள்ளன. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று நிறுவுவதற்கு சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலும், பிற சான்றுகளின் அடிப்படையிலும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று 1921-ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி விவாதித்த 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களும், சான்றோர்களும் அறிவித்தனர்.

Ramadoss Statement: தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டம் இயற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

அதன்பின்னர், 1939-ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார் உள்ளிட்டோர் பங்கேற்ற அனைத்திந்திய தமிழர்கள் மாநாட்டிலும் தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. ‘‘நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு, தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!’’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் பாடியிருக்கிறார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம்புவதற்கும், அதை உலகுக்கு நிரூபிப்பதற்கும் இவற்றைக் கடந்து கூடுதல் சான்றுகள் எதுவும் தேவையில்லை.

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக நான் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்று  கடந்த 2008-ஆம் ஆண்டில் தமிழ்நாடு  தமிழ்ப்  புத்தாண்டு  (விளம்புகை) சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், 2011-ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான  அதிமுக அரசு, 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் தமிழ்நாடு  தமிழ்ப்  புத்தாண்டு  (விளம்புகை) சட்டத்தை  நீக்குவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. அதை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அகற்றப்பட்ட நிலையில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய அரசுக்கு உள்ளது. தைத் திங்கள் பிறக்க இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள்ளாக புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுனரின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஜனவரி மாதம் கூடும் கூட்டத் தொடரில் புதிய சட்டத்தை நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலைப் பெற அவகாசம் இருக்காது. அதைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget