மேலும் அறிய

மீண்டும், மீண்டும் துரோகம் செய்யக் கூடாது - டென்ஷன் ஆன அன்புமணி

பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம்.

மீண்டும், மீண்டும் துரோகம் செய்யக் கூடாது, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனே உயர்த்த வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்; 109 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கோட்ட, மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன்பு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நாளையும் தொடரவிருக்கிறது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்படுவது பெரும் அநீதி ஆகும். பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம் ஆகும். ஆனால், அரசு வகுத்த சட்டத்தை, அரசே மீறி 21 மாதங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுப்பது பெரும் துரோகம் ஆகும்.
 
அதேபோல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் இப்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 60% அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.
 
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட அதை செயல்படுத்தாத திமுக அரசு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே இது காட்டுகிறது. 
 
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடன் ஒப்பிடும் போது, மின்சார வாரியம் அதிக நஷ்டத்திலும்,கடனிலும் இயங்குகிறது. ஆனால், மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட அவர்களுக்கான அகவிலைப்படியை 50 விழுக்காட்டிலிருந்து 53 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அவ்வாறு இருக்கும் போது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக் கூடாது. அவர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன், பணி ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget