சித்திரா பௌர்ணமியை தேர்வு செய்த மருத்துவர் ராமதாஸ் ; எதற்கு தெரியுமா?
சித்திரை பெளர்ணமி மே 12 அன்று பிரம்மாண்டமான ஒரு நல்லிணக்க மாநாடாக வன்னியர் சங்கம் நடத்த உள்ளது என்று மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்
விழுப்புரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் "2024க்கு விடை கொடுப்போம் 2025 ஐ வரவேற்போம்" புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
முதலாவதாக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கபட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது
இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்புரையாற்றி பேசியது,
பாமகவிற்கு தனி வரலாறு உள்ளது. தனி நபர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சிகளுக்குகிடையில் மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி பாமக. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குமிடிப்பூண்டி முதல் கன்னியாகுமாரி வரை 95 ஆயிரம் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டக்களத்திற்கு கொண்டு வந்தேன். அப்போதைய அரசு 21 உயிர்களை சுட்டுக்கொன்றது.
1989ம் ஆண்டு வன்னியர் சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு, நமக்கான உரிமைகளை மீட்டெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்! காரணமான முகுந்தன் யார்?
இதனை தொடர்ந்து ஆளும் கட்சி பு தா அருள்மொழி உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தது. கட்சியை தொடங்குவதில் பின்வாங்காமல், விழுப்புரத்தில் நடைபெற்ற பேரணியில் தடியடி நடத்தியது. இப்படி பல்வேறு அடக்குமுறைகளுக்கு இடையே பாமக தொடங்கப்பட்டது.
கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து இருந்தால் 4 நாட்களுக்கு முன் நடத்திய தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி நம் பக்கம். 2026 ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருமுறை தப்பு செய்தால் மீண்டும் தப்பு செய்வோம் என்று அர்த்தம் இல்லை. அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வோம். சித்திரை பெளர்ணமி மே 12 அன்று பிரம்மாண்டமான ஒரு நல்லிணக்க மாநாடாக வன்னியர் சங்கம் நடத்த உள்ளது.
இதையும் படிங்க: PMK: "கட்சியை விட்டு போ": வார்த்தையை விட்ட ராமதாஸ்: மைக்கை கீழே போட்ட அன்புமணி..உடையும் பாமக?
அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம். தமிழகம், புதுவையில் ஆட்சி அமைக்கப்போவது நன் கூட்டணி தான். இங்குள்ளவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் இனி திமுக ஆட்சி வரக்கூடாது என சபதம் ஏற்போம். நீங்கள் செல்போனை கீழே போட்டுவிட்டு உழைக்க வேண்டும். கட்சியை வளர்க்க வேண்டும். இரு கைகளைகூப்பி வணக்கம் சொல்லும்போது கைகளுக்கு இடையில் செல்போன் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்குழு கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
தீர்மானங்கள்
1. சாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயமாக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்
2. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
3. மத்திய அரசின் வேலைவாய்ப்பில் ஓபிசிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
4. தேசிய பிற்படுத்தபட்ட ஆனையத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்
5 வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டத்தை விரைவாக ஒதுக்க வேண்டும்
6. அதானி ஊழலுக்கு சிபி ஐ விசாரனை தேவை
7. தமிழ்நாட்டில் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்சார கண்டனத்தை குறைக்க வேண்டும்
8. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்
9. மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்
10. தமிழ்நாட்டில் உழவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆராயவும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுஅமைக்க வேண்டும்
11. கள்ளக்க்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரனை ஆனை பெற்ற ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி
12. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
13. ஆசிரியர்கள் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்
14. காலியாக உள்ள 6.25 லட்சம் அரசு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
15. டங்ஸ்டன் சுரகத்திற்கு அளிக்கபட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்
16. என் எல் சி நிறுவனத்தை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்
17. தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
18. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் ஒழிக்க வேண்டும்
19 தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கு ஏற்படுத்த வேண்டும்
20. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதுகாப்பு வழங்க தவறிய தமிழக அரசுக்கு கண்டனம்
21. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை தேவை
22. மேகதாது அனை கூடாது காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலிமையான காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வேண்டும்
23. முல்லைபெரியாறு அனையின் நிர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்
24. ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்,
25. தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்
26. ஆன்லைன் ரம்மிக்கு உச்சநீதிமன்றத்தில் தடைபெறும் நடவடிக்கையை அரசு விரிவு படுத்த வேண்டும்
27. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்
28. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தாமதிக்காமல் மத்திய அரசு வழங்க வேண்டும்.
29. புதுவை லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்
30. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இரங்கல் தீர்மானம் என 30 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன