PM Modi TN Visit: பொன்னியின் செல்வன் புத்தகத்தை வழங்கி திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்..
இன்று தமிழகம் வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.
இன்று தமிழகம் வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்த பிறகு பிரதமர் மோடி இன்று நண்பகல் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை வரவேற்றார்.
‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் மற்றும் ‘பாரத் கவுரவ் காசி தர்ஷன்’ ரெயில்களை கொடியசைப்பதற்காக கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா (கேஎஸ்ஆர்) நிலையத்துக்கு அவர் சென்று கொண்டிருந்த போது பிரதமர் நரேந்திர மோடி தனது காரை நிறுத்திவிட்டு, 'விதான் சவுதா'விற்கு அருகில் உள்ள கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு முக்கிய போக்குவரத்து சந்திப்பில் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை நோக்கி கை அசைத்தார்.
Karnataka | Prime Minister Narendra Modi met people as he received a warm welcome in Bengaluru today. pic.twitter.com/JcyakHVGWG
— ANI (@ANI) November 11, 2022
தனது காரின் ‘ரன்னிங் போர்டு’ மீது நின்று கொண்டு, கூட்டத்தை மோடி வரவேற்றார், அவர்களில் பலர் ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பியபடியும், பாஜக கொடிகளை உயர்த்தி பிடித்தபடியும் வரவேற்றனர்.பின்னர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் (கேஐஏ) டெர்மினல்-2 திறப்பு விழாவுக்குச் சென்ற மோடி, கே.எஸ்.ஆர் ரயில் நிலையம் அருகே உள்ள முக்கிய போக்குவரத்துச் சந்திப்பில் வாகனத்தில் இருந்து இறங்கி, அனைத்துப் பக்கங்களிலும் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி நடந்து சென்றார்..
600 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை நிறுவிய வல்லமை வாய்ந்த விஜயநகரப் பேரரசின் தலைவரான 'நடபிரபு' கெம்பேகவுடாவின் 108 அடி உயர சிலையை திறந்து வைப்பதற்கும், KIA இன் டெர்மினல்-2 ஐ திறந்து வைப்பதற்கும் பிரதமர் பெங்களூருவுக்கு பயணம் மேற்கொண்டார். . கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், மோடியின் பெங்களூரு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறார். இசைத்துறையில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு இந்த கவுரவ பட்டம் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்திலும், அந்த பகுதி முழுவதிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காந்தி கிராம பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமின்றி, மிருதங்க இசை சக்கரவர்த்தியான உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு 2 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்திகிராமம் செல்கிறார். வானிலை நிலவரத்தை பொறுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் செல்வாரா? அல்லது தரை மார்க்கமாக செல்வாரா? என்பது முடிவு செய்யப்படும்.
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் காந்தி கிராம பல்கலைகழகத்திற்கு வருகை தர உள்ளதால் மதுரை முதல் திண்டுக்கல் வரையிலும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.