மேலும் அறிய

Parandur Airport Protest: கைவிடப்பட்டது பரந்தூர் விமான நிலைய போராட்டம் - என்ன காரணம்?

Parandur Airport Protest: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த, பொதுமக்களின் போரட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Parandur Airport Protest: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு  போராட்டம் 600 நாளாக நடைபெற்று வந்த நிலையில், போராட்டம் கைவிடப்படுகிறது. 600 நாளாக தொடர்ந்து, மாலை நேர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் இன்று முதல் போராட்டத்தை கை விடுவதாக அறிவித்துள்ளனர்.

சட்டநடவடிக்கை எடுக்க முடிவு:

விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் சட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினரை அனுமதிக்க மாட்டோம் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வயல்வெளிகளில் இறங்கி போராட்டம்:

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊர் மக்களும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கமும்  பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். ஆனாலும், நில கையகப்படுத்துதல் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதனால்,  அரசை கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பேரணியாக சென்று வயல்வெளிகளில் இறங்கி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   4 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக இதுவரை நாளிதழ்களில் வெளியான செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏகனாபுரம் கிராமத்திலிருந்து பேரணியாக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி கிராம மக்கள் ஊர்வலமாக சென்று வயல்வெளியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக அங்கு 100-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து தொடர் போராட்டம் கைவிடப்படுவதாகவும், சட்ட போராட்டம் தொடங்க உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: Semmozhi Conference: சென்னையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - எப்போது நடக்கிறது?

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு ஏன்?

பரந்தூர் விமான நிலையத்தால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கக்கூடும்.  நீர்நிலைகள் அழியும் சூழல் உருவாகும். இதனால், ஒட்டுமொத்தமாக தங்களது வாழ்வாதாரமே பாதிக்கும் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆரம்பத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த 4563 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என  கூறப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான அரசாணையில் 20 கிராமங்களைச் சேர்ந்த 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் 2682.62 ஏக்கர் WETLANDS(வேளாண் நிலம்+நீர்நிலை) என்பது அதிர்ச்சியளிக்கிறது.  விமான நிலையைம் வந்தால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திட்டங்கள், கட்டுமானங்கள், அடிப்படை வசதிகள் எழுப்ப நிலம் பயன்படுத்தப்படும். இதனால், தங்களது உடைமைகளை இழக்க நேரிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget