மேலும் அறிய

பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்

பொள்ளாச்சியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில். 3 பெண்கள் மீட்பு – உரிமையாளருக்கு போலீஸ் வலை வீச்சு

" பிசியோதெரபி கிளினிக் பெயரில் பாலியல் தொழில் "

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் , அவருடன் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் கேரளியம் ஆயுர்வேதிக் பிசியோதெரபி என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கிளினிக்கிற்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து இன்று மகாலிங்கபுரம் காவல் துறையினர் வாடிக்கையாளர்களை போல அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மூன்று இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் பாலியல் தொழில் வாடிக்கையாக நடந்து வந்ததும் தெரிய வந்தது.

ஆன்லைன் புக்கிங் - 3 இளம் பெண்கள் கைது

பிசியோதெரபி கிளினிக் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சென்னை , சேலம் , கோவை மாவட்டத்தைச் சென்ற மூன்று இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் மற்றும் அவருடன் இருக்கும் இளம் பெண் இருவரும் சேர்ந்து நடத்தி வந்த இந்த கிளினிக்கில் பிசியோதெரபி அக்கு பஞ்சர் சிகிச்சை அளிக்கப்படும் என ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்களை முன் பதிவு செய்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒருவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மற்ற இரு இளம் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர். மேலும் அக்கு பஞ்சர் கிளினிக் நடத்தி வந்த உரிமையாளர் அனீஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மருத்துவ சிகிச்சை பெறும் ஆயுர்வேதிக் பிசியோதெரபி கிளினிக் போல செயல்பட்டு வந்த இடத்தில் பாலியல் தொழில் நடந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget