TN Election Results 2021: தமிழர்களுக்கு இனித்திடும் வாக்குறுதி; ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தெரிவித்த வாழ்த்திற்கு ஸ்டாலின் அளித்த பதிலும், அதற்கு மறுபதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அரிதி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரபலங்கள் பலரும் ஸ்டாலினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இசைபுயல் ஏ. ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்து உள்ளார் . அது இன்று இந்த அளவிற்கு டிரண்ட் ஆகும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
'சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
என்று பதிவிட்டு இருந்தார் . ரஹ்மானின் இந்த வாழ்த்து, வெறுமனே வாழ்த்தாக இல்லாமல் கோரிக்கையாகவும் இருந்தது. இதற்கு ஸ்டாலின் என்ன பதிலளிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்த படியே ஸ்டாலினும் பதிலளித்தது ரஹ்மானை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) May 3, 2021
அதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்த்துக்கு ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்து ரிப்ளே செய்திருந்தார். அதில் நிச்சயம் தமிழர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் என ரீடுவிட் செய்திருந்தார் ஸ்டாலின். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் ரீடுவிட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும். https://t.co/m0urghBjVr
— M.K.Stalin (@mkstalin) May 3, 2021
இந்த பதிவு சுவாரசியமாக தொடங்கியதற்கு காரணம் ஏ. ஆர். ரகுமான் பதிலளித்த ரீ-ட்வீட் தான். கொரோனா பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு ஸ்டாலினின் பதில், தேன் போல இனித்திடும் வாக்குறுதி என்றும் இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகவும், ஸ்டாலினின் பதில் டுவிட்டுக்கு, ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு இது, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! https://t.co/S6WbFFSJYn
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) May 4, 2021
ஏ.ஆர்.ரஹ்மான்-ஸ்டாலின் இடையே நடந்த இந்த இணைய பரஸ்பர வாழ்த்து உரையாடல், சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த அளவிற்கு அரசியல் சார்ந்த பதிவுகளை ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு முன் வெளியிட்டது இல்லை என்பதால் அவரை ஆதரித்து பலரும், விமர்சித்து சிலர் தங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பிரபலங்கள் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்த்து அவரை போலவே பிரபலமாகிவிட்டது.