மேலும் அறிய

OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை

பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திற்கு ஆதரவாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  100 நாட்கள் வேலை திட்டத்திற்கு பதிலாக விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மசோதா 

அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்  திட்டத்திற்குப் பதிலாக, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது. இந்தச் சட்டமுன்வடிவில் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்படி மக்கள் தொகை, வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைவதோடு, வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையக்கூடும்.

விவசாயிகளை பாதிக்கும் செயல்

இந்த திட்டத்திற்கான மத்திய நிதி உதவி என்பது 60 விழுக்காடாகவும், மாநில நிதி உதவி என்பது 40 விழுக்காடாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் நிதி உதவி என்பது 100 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்களின் மீது 40 விழுக்காடு கூடுதல் நிதி திணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் விதைப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட வேளாண் பருவம் குறித்த 60 நாட்களை மாநில அரசு அறிவிக்க வேண்டுமென்றும், அந்த நாட்களில் இந்தச் சட்டத்தின்கீழ் எந்தப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வேளாண் பருவத்தில் குறைந்த ஊதியத்தில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

சட்டமுன்வடிவு -வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது

தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுன்வடிவு வேலை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், வேளாண் பருவக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கவும் வழிவகை செய்வதோடு, மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே, நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தச் சட்டமுன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே மாநிலங்களின் நலன்களையும், விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட ஏழையெளிய கிராமப்புற மக்களின் நலன்களையும் பாதிக்கும் விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளவர், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நாதக வேட்பாளர்: ஏர் கலப்பை, ஆட்டுக்குட்டியுடன் மனு! விவசாயிகளின் கவனத்தை ஈர்த்த நூதன முயற்சி!
நாதக வேட்பாளர்: ஏர் கலப்பை, ஆட்டுக்குட்டியுடன் மனு! விவசாயிகளின் கவனத்தை ஈர்த்த நூதன முயற்சி!
இன்று முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! ஏப்ரல் 5 வரை வானிலை எப்படி இருக்கும்?
இன்று முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! ஏப்ரல் 5 வரை வானிலை எப்படி இருக்கும்?
Annamalai: ஜோசியமா? பழைய கர்மாவா? - அண்ணாமலையை சுத்துபோடும் பாஜக தலைகள் - மோடிக்கே கல்தா ஏன்?
Annamalai: ஜோசியமா? பழைய கர்மாவா? - அண்ணாமலையை சுத்துபோடும் பாஜக தலைகள் - மோடிக்கே கல்தா ஏன்?
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
Annamalai: ஜோசியமா? பழைய கர்மாவா? - அண்ணாமலையை சுத்துபோடும் பாஜக தலைகள் - மோடிக்கே கல்தா ஏன்?
Annamalai: ஜோசியமா? பழைய கர்மாவா? - அண்ணாமலையை சுத்துபோடும் பாஜக தலைகள் - மோடிக்கே கல்தா ஏன்?
Trump on Iran War: “என் இலக்கு இதுதான்” - போர் குறித்து உண்மையை உடைத்த ட்ரம்ப்; பரபரப்பு விளக்கம்
“என் இலக்கு இதுதான்” - போர் குறித்து உண்மையை உடைத்த ட்ரம்ப்; பரபரப்பு விளக்கம்
PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி
New Kia Seltos 5 Star: இந்த பயில்வான் கிட்ட மோதாதே; கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை தட்டித் தூக்கிய கியா செல்டோஸ்
இந்த பயில்வான் கிட்ட மோதாதே; கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை தட்டித் தூக்கிய கியா செல்டோஸ்
GOLD SILVER RATE MAR. 30: அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?
Toyota Innova Hycross Facelift: பெரிய வண்டி பெரிய மைலேஜ்; புதுப்பொலிவுடன் வரும் இன்னோவா ஹைக்ராஸ்; என்னென்ன மாற்றங்கள்.?
பெரிய வண்டி பெரிய மைலேஜ்; புதுப்பொலிவுடன் வரும் இன்னோவா ஹைக்ராஸ்; என்னென்ன மாற்றங்கள்.?
Embed widget