மேலும் அறிய

Toyota Innova Hycross Facelift: பெரிய வண்டி பெரிய மைலேஜ்; புதுப்பொலிவுடன் வரும் இன்னோவா ஹைக்ராஸ்; என்னென்ன மாற்றங்கள்.?

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸின் என்ஜின் மற்றும் செயல்திறனில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனவும், தற்போதைய மாடலைப் போலவே, இதிலும் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் என தெரிகிறது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானது. நீங்கள் எதிர்காலத்தில் இந்த காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குத் தான். இந்த காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். புதிய இன்னோவா ஹைக்ராஸ் அதன் தோற்றம் மற்றும் அம்சங்கள் இரண்டிலும் மாற்றங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

கிடைத்த தகவல்களின்படி, மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும், இதை அந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. டொயோட்டா நிறுவனம் பொதுவாக தனது மாடல்களை, அறிமுகப்படுத்தப்பட்ட சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கும். எனவே, இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மாடல், 2026-ம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2027-ம் ஆண்டின் முற்பகுதியிலோ வரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸில் வரும் மாற்றங்கள் என்ன.?

மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், சற்றே நவீனமயமாக்கப்பட்ட முன்பகுதி, கிரில், ஹெட்லைட்கள் மற்றும் பம்பர் உள்ளிட்ட சிறிய வடிவமைப்பு மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்திலும் புதிய அம்சங்களும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் இடம்பெற்று, காருக்கு மேலும் ஒரு ப்ரீமியம் தோற்றத்தை அளிக்கும். 

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸின் என்ஜின் மற்றும் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. தற்போதைய மாடலைப் போலவே, இதுவும் சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் மென்மையான ஓட்டுதலை வழங்கும் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் தேர்வுகளை தொடர்ந்து வழங்கும். 

சென்னையில் எக்ஸ்-ஷோரூம் விலை என்ன.?

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படை மாடலின் ஆரம்ப விலை 19.15 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்,  சென்னை ) ஆகும் . 3.63 லட்சம் ரூபாய் (RTO கட்டணம்), 1.43 லட்சம் ரூபாய் (காப்பீட்டுக் கட்டணம்) மற்றும் இதர கட்டணங்களைச் சேர்த்த பிறகு, ஆன்-ரோடு விலை 24.40 லட்சம் ரூபாய் ஆகும்.

உயர் ரக ZX(O) ஹைப்ரிட் வேரியண்ட்டின் விலை 32.38 லட்சம்  ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) ஆகும். VX(O) ஹைப்ரிட் வேரியண்ட்டின் விலை 28.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

காரின் பவர்டிரெய்ன் எப்படி உள்ளது.?

தற்போதைய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இரண்டு என்ஜின் தேர்வுகளுடன் வருகிறது. முதலாவது, 173 bhp சக்தியையும் 209 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆகும். இரண்டாவது தேர்வு, பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் ஆகிய இரண்டு முறைகளிலும் இயங்கும் 2.0-லிட்டர் சக்திவாய்ந்த ஹைப்ரிட் என்ஜின் ஆகும்.

மைலேஜை பொறுத்தவரை, பெட்ரோல் வேரியன்ட் லிட்டருக்கு 16.13 கிமீ மைலேஜையும், ஹைப்ரிட் வேரியன்ட் லிட்டருக்கு 23.24 கிமீ வரை மைலேஜையும் வழங்குகிறது. மேலும், இந்த வாகனம், ஒரு முழு டேங்க் எரிபொருளில் 1200 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியது.

ஏற்கனவே இந்த காருக்கு மக்களிடையே நல்ல மவுசு இருக்கும் நிலையில், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலும் கார் பிரியர்களை கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை

Embed widget