மேலும் அறிய

PMK Candidate List: பட்டியலில் சௌமியா, திலகபாமா - பாமக வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி - யார்? எங்கு? போட்டி

PMK Candidate List 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார்.

PMK Candidate List 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில், தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி,

  • பெரம்பூர் - திலகபாமா
  • தருமபுரி - சௌமியா அன்புமணி
  • விருதாச்சலம் - தமிழரசி ஆதிமூலம்
  • சேலம் மேற்கு - கார்த்தி
  • பென்னாகரம் - பாடி வெ. செல்வம்
  • போளூர் - சி.ஆர். பாஸ்கரன்
  • திருப்போரூர் - வழக்கறிஞர் கே. பாலு
  • ஜெயங்கொண்டாம் - வைத்தி
  • சேலம் வடக்கு - சதாசிவம்
  • விக்கிரவாண்டி - சிவக்குமார்
  • சோளிங்கர் - சரவணன்
  • மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ. பழனிசாமி
  • உத்திரமேரூர் - மகேஷ்குமார்
  • ரிஷிவந்தியம் - செழியன்
  • காட்டுமன்னார் கோயில் - அன்பு. சோழன்

ஆகியோரை வேட்பாளர்களாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:

முன்னதாக பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 3 தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி,

  • கீழ்வேளூர் - வடிவேல் சரவணன்
  • அம்பத்தூர் - என். சேகர்
  • செஞ்சி - கணேஷ் குமார் 

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

நட்சத்திர வேட்பாளர்கள்:

கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் தருமபுரியில் போட்டியிட்டு தோல்வியுற்ற சௌமியா அன்புமணி, இந்தமுறை தருமபுரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநில பொருளாளர் மற்றும் எழுத்தாளரான திலகபாமா பெரம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் தான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் போட்டியிடுகிறார். இதனால், திலகபாமா  - விஜய்- திமுக சிட்டிங் எம்.எல்.ஏவான ஆர்.டி. சேகர் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு திலகபாமா வெற்றி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு நட்சத்திர தொகுதியாக விருதாச்சலம் உருவெடுத்துள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் பிரேமலதா களமிறங்குகிறார். அவருக்கு எதிராக பாட்டாளி மகளிர் சங்கத்தின் மாநில செயலாளரான தமிழரசி ஆதிமூலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக Vs பாமக

ஒட்டுமொத்தத்தில் 

  • விருத்தாசலம்
  • தருமபுரி
  • சேலம் மேற்கு

ஆகிய மூன்று தொகுதிகளில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.

தேமுதிக வேட்பாளர்கள்

  • விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த்
  • தருமபுரி - V.இளங்கோவன்
  • சேலம் மேற்கு - அழகாபுரம்.R.மோகன்ராஜ்
  • விருதுநகர் - வி.விஜய பிரபாகர்
  • ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன்,
  • மைலம் - எல்.வெங்கடேசன்
  • பல்லாவரம் - அனகை.D.முருகேசன்
  • திருத்தணி - D.கிருஷ்ணமூர்த்தி
  • குடியாத்தம் (தனி) - K.B.பிரதாப்
  • போளூர் - T.P. சரவணன்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget