மேலும் அறிய

Online game: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு... நீதிமன்றம் சரமாரி கேள்வி? தடை நீக்கப்படுமா?

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடை சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடை சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நீக்க கோரி விளையாட்டு நிறுவனங்கள் தொடந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடை சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளது. சூதாட்டத்தில் ஏற்படும் மரணங்கள் குடும்ப வறுமை ஆகியவற்றை தடுக்கவே இந்த மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன் மக்களை காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக அரசு கூறியதாக கூறிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் குதிரைபந்தயம், லாட்டரி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதை தெரிந்து கொள்ளுங்கள் என விளையாட்டு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தது. மேலும் வழக்கு விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

முன்னதாக ,தமிழக அரசு 2022-ல் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார்.  மீண்டும் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு, ஆளுநர் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், தமிழக அரசின் தடை சட்டத்தால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான திருத்த விதிகளை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இளைஞர்கள் விபரீத முடிவுகளை எடுப்பதற்கும், உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதையும் குறிப்பிடவில்லை என்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தமிழக அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை.

ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை, தமிழக அரசு மீண்டும் இயற்றி உள்ளது. திறமைக்கான விளையாட்டு எது, அதிர்ஷ்ட வாய்ப்பளிக்கும் விளையாட்டு எது என்பதை வேறுபடுத்தாமல்,  பொதுவாக ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது சட்டவிரோதமானது.

எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget