TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
TVK Vijay Follows Astrology?: த.வெ.க தலைவர் விஜய், சமீபத்தில் வெளியிட்ட பட்டியல்கள் அனைத்துமே, 19 பேரை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதனால், அவர் ஜோதிடர் சொல்வதுபோல் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் வாதிகள் உள்பட, சமூகத்தில் பெரிய இடங்களில் உள்ளவர்கள், ஜோசியம் பார்த்து, அதன்படி செய்வது என்பது புதிதல்ல. அந்த லிஸ்ட்டில் தற்போது விஜய் இணைந்துவிட்டாரோ என்று தவெகவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணமே, சமீபத்தில் வெளியான பட்டியல்கள் அனைத்துமே, 19 என்ற இலக்கத்தில் உள்ளதுதான்.
இதுவரை தவெக வெளியிட்ட 3 பட்டியல்களிலும் தலா 19 பேர்
ஒரு செயல், ஒரு முறை தற்செயலாக நடக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் தற்செயலாக நடக்காது. என்ன புரியவில்லையா.? தவெக இதுவரை, 2 மாவட்ட செயலாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல், முக்கிய பொறுப்புகளில் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை நியமித்து ஒரு பட்டியல் வெளியானது. இவை எல்லாவற்றையும் நீங்கள் கவனித்து பார்த்தால், ஒவ்வொரு பட்டியலும் 19 பெயர்கள் கொண்ட பட்டியலாகவே இருந்தது. அங்குதான் தவெகவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
நிர்வாக வசதிக்காக தவெக கட்சியின் மாவட்டங்கள் 120-ஆக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2 பட்டியல்கள் வெளியாகின. அதில் கனிசமான அளவிற்கு நிர்வாகிகளை நியமித்து பட்டியலை விஜய் வெளியிடுவார் என்று பார்த்தால், 19 பேர் மட்டுமே அடங்கிய பட்டியல்களாகவே வெளியிடப்படுகின்றன.
சரி, மாவட்ட செயலாளர்கள் பட்டியல்தான் இப்படி என்று பார்த்தால், தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கி வெளியிடப்பட்ட பட்டியலிலும் 19 பேர்கள் தான் இருக்கின்றன.
எண் 19 பற்றி ஜோதிடம் கூறுவது என்ன.?
ஜோதிட ரீதியாக பார்த்தால், ஒன்று என்பது சூரியனின் ஆதிக்கத்தையும், 9 என்பது செவ்வாயின் ஆதிக்கத்தையும் குறிக்கிறதாம். இதில், ஆட்சி, அதிகாரம், உழைப்பு, தலைமைப் பண்பு ஆகிவற்றிற்கு உகந்ததாக சூரியனும், ஆற்றல், தைரியம், உறுதி ஆகியவற்றிற்கு உகந்ததாக செவ்வாயும் இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்விரண்டு எண்களையும் இணைத்து, அந்த எண்ணை பயன்படுத்தும்போது, அதற்கான பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஜோதிடர் பிடியில் விஜய் இருக்கிறாரா என தவெகவினர் சந்தேகம்
இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் தொடர்ந்து வெளியிடும் பட்டியலில் 19 பெயர்கள் மட்டுமே இடம்பெறுவதால், ஒருவேளை விஜய் ஏதேனும் ஜோதிடர் கூறுவதை கேட்டு இப்படி செய்கிறாரோ என தவெகவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் பெரியார் பாதையை ஆதரிக்கும் விஜய், சனாதனம் பேசும் பாஜகவையும் எதிர்க்கிறார். ஆனால், இன்னொரு பக்கம் இப்படி ஜோதிடம் பார்த்து செயல்படலாமா என கேட்கும் தவெகவினர், தாங்கள் எந்த திசையில் பயணிப்பது என புலம்புகின்றனராம்.
கருணாநிதி, ஜெயலலிதா வழியில் விஜய் செயல்பாடா.?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பொதுவெளியில் பெரியாரின் கொள்கைகளை உடையவராக செயல்பட்டார். ஆனால், அவர் வாஸ்து, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் ஜோதிடரை கலந்தாலோசித்து வீட்டில் கூட சில மாற்றங்களை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், கழுத்தில் மஞ்சள் துண்டு அணிந்தது, ஜோதிடர் ஒருவர் கூறியதால் தான் என்ற பேச்சும் இருந்தது.
அதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார். தன் மீது கிரிமினல் வழக்குகள் இருந்து தேர்தலில் போட்டியிட முடியாமல் போனபோதிலும், 2001-ல் அவர் முதலமைச்சராக ஆவார் என்று கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறியபடி முதலமைச்சர் ஆனதால், பணிக்கருக்கு சன்மானமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதுன், அவர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக மாறினார். ஜெயலலிதாவும் கோயில்களுக்கு ஏராளமானவற்றை செய்துள்ளார்.
இப்படி, முக்கிய அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையில், ஜோதிடம் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ள போது, விஜய் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கேற்றார்போல், தற்போது விஜய்யின் சில செயல்பாடுகள் உள்ளதால், அவர் ஜோதிடர் பிடியில் சிக்கியுள்ளாரோ என தவெகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

