மேலும் அறிய

Omni Bus : அடேங்கப்பா... இதுதான் சாக்கா..? தங்க விலையை ஓவர்டேக் செய்யும் ஆம்னி பேருந்து கட்டணங்கள்! அதிர்ச்சியில் பயணிகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் பண்டிகை காலங்களில் சொந்து ஊர்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இதனால் பண்டிகை காலங்களில் பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  கிறிஸ்துமஸ் மட்டும்மில்லாமல், ஆங்கில புத்தாண்டு,  24ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்,  ஆம்னி பேருந்தில் கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 25-ஆம் தேதி சொந்த ஊர்களுக்ககு செல்லும் பயணிகளை குறிவைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 1-ஆம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கமாக இருப்பதை விட 2 மடங்கு உயர்ந்துள்ளது.

கட்டண உயர்வு

குறிப்பாக இன்று பார்க்கும்போது, பஸ்களின் கட்டணம் வழக்கமான நாளைவிட 2 மடங்கு அதிகமாக இருப்பதை காண முடிகிறது. உதாரணமாக, திருநெல்வேலிருந்து இருந்து சென்னைக்கு வழக்கமான நாட்களில் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் சுமார் ரூ.2,400 முதல் 2,700 வரை கட்டணம், ஆனால் ஐனவரி 1-ஆம் தேதி ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல்,   மதுரையிலிருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.700 முதல் 1,000 வழக்கமான கட்டணம், ஐனவரி 1-ஆம் தேதி ரூ.2,900 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு சுமார் ரூ.1,300 வழக்கமான கட்டணம், ஜனவரி 1 முதல் ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டணம் குறைவாக இருக்கும் பேருந்துகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆனாதால் மக்கள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்கின்றனர். இதனால், பண்டிகை காலங்களில் விமான டிக்கெட் கட்டணத்துக்கு இணையான வகையில் ஆம்னி  பேருந்து கட்டணம் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகுகின்றனர்.

அபராதம்

இதனை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதனால், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 92, 500 அபராதம் விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து புகார் எழுந்ததையடுத்து கோயம்பேடு,போரூர் பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 49 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, 49 பேருந்துகளுக்கும் ரூ.92, 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், புகாரளித்த 9 பயணிகள் செலுத்திய அதிக கட்டணம் ரூ.9,200 பணமும் அவர்களுக்கே திரும்பப் தரப்பட்டது. 

மேலும் படிக்க

“நலமாக இருக்கிறேன்; எனக்கு எந்த காயமும் இல்லை; காருக்குதான்...” - ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget